தமிழ்நாடு

tamil nadu

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Nov 13, 2020, 3:53 PM IST

Published : Nov 13, 2020, 3:53 PM IST

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm

1. துணைவேந்தருக்கு எதிரான விசாரணைக் குழு முடிவு அரசு எடுக்கவில்லை - துணை முதலமைச்சர்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான விசாரணைக் குழு முடிவை அரசு எடுக்கவில்லை என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

2. மகா தீபத்திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகா தீபத் திருநாளான நவம்பர் 29ஆம் தேதியன்று கிரிவலம் செல்லவும், பக்தர்கள் கோயிலுக்கு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

3. சென்னையில் தீபாவளி அன்றும் மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் (தீபாவளி அன்றும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4. ராஜினாமா செய்த கொடியேறி பாலகிருஷ்ணன்

கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

5. அரசு நிலத்தில் கிரிக்கெட் மைதானம்: எப்ஐஆர் பதிவு செய்ய ஆட்சியருக்கு கிரண்பேடி உத்தரவு...!

நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து துத்திப்பட்டு கிராமத்தில் தனியார் கிரிக்கெட் மைதானம் கட்டியது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்ய ஆட்சியருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

6. பயங்கரவாதிகளின் பட்டியலை வெளியிட்ட பாகிஸ்தான்

பாகிஸ்தான் அரசாங்கம் மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உள்ளிட்ட தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் ஆயிரத்து 210 பேரின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

7. மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் செயலிகளின் தரவுகளை அளிக்கும் அம்சம்!

ஃபேஸ்புக் தனது மெசேஞ்சர், இன்ஸ்டாகிராம் தளங்களில் 'அழிந்துபோகும்' (Vanish) பயன்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களின் உரையாடல்கள், புகைப்படங்கள், குரல் செய்திகள் ஆகியன மறைந்து போகும் அம்சத்தினைக் கொண்டுள்ளது. இது பயனர்களின் தேர்வுக்கு உட்பட்டது என்று ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

8. ”வலிமை பட அப்டேட் காணவில்லை...” - போஸ்டர் ஒட்டி ஆதங்கத்தை வெளிப்படுத்திய அஜித் ஃபேன்ஸ்!

அஜித்தின் ’வலிமை’ பட அப்டேட் குறித்து புதிய அறிவிப்பு எதுவும் வெளியாகதால் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

9. உலகக்கோப்பை 2021: இது இந்தியாவிற்கான நேரம்…

ஐசிசி ஆண்கள் டி-20 உலகக்கோப்பை 2021-ஐ நடத்த இந்தியா தயாராகிவருகிறது என்றும், இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

10. ரூல்ஸ் தெரியாது... ஃபைன் கட்றேன்... குருணால் பாண்டியா ரிலீஸ்!

மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் வீரர் குருணால் பாண்டியா, அளவுக்கு அதிகமான தங்கத்தை கொண்டு வந்ததற்காக அபராதம் கட்டியபின் விடுவிக்கப்பட்டார்.

ABOUT THE AUTHOR

...view details