தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2020, 3:04 PM IST

ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm

சுகாதார செயலர் குடும்பத்தில் 4 பேருக்கு கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்பட நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

’தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்ப சொத்தல்ல’ - எல். முருகன்

சென்னை: தமிழும், திருக்குறளும் திமுகவின் குடும்பச் சொத்தல்ல என பாஜக மாநில தலைவர் எல். முருகன் சாடியுள்ளார்.

பாஜக மாநிலங்களவை கொறடாவாக சிவ் பிரதாப் சுக்லா நியமனம்!

டெல்லி: பாஜக மாநிலங்களவை கொறடாவாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவ் பிரதாப் சுக்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

'மருத்துவ படிப்பு இட ஒதுக்கீட்டுக்கு உச்ச நீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்'

சென்னை: காசிமேடு துறைமுகத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!

கிண்ணிமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள 'ஏகன் ஆதன் கோட்டம்' என்ற தமிழி எழுத்துகளால் பொறிக்கப்பட்ட கல்தூண், தமிழர் வரலாற்றில் மிக முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்துவதுடன், தமிழர்களின் பண்பாடு, சமய வழிபாட்டு முறையையும் உலகுக்கு எடுத்துரைக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!

சென்னைக்கு வெளிநாட்டு பறவைகள் கடத்தல்? - காவல்துறை விசாரணை

சென்னை: மூன்று லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பறவைகளை தொடர்வண்டியில் கொண்டு வந்த 4 பேரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

'மக்கள் சேவையில் டாண்டனின் பணி மகத்தானது' - முதலமைச்சர் இரங்கல்

சென்னை: மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் தற்போதைக்கு திறப்பில்லை - தலைமை நீதிபதி

சென்னை: வழக்கறிஞர்கள், பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்த பின்னரே நீதிமன்ற திறப்பு குறித்து முடுவெடுக்கப்படும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தெரிவித்துள்ளார்.

ஹஜ் யாத்திரை செல்ல எத்தனை பேருக்கு அனுமதி?

ரியாத்: இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை தொடர்பாக சவுதி அரேபியா அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டுவதா? - அதிமுக வெளிநடப்பு

புதுச்சேரி: ஜெயலலிதா சிலை வைப்பதற்கு மறுக்கும் காங்கிரஸ் அரசு, பல்வேறு திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை சூட்டுவது கண்டிக்கத்தக்கது என்று கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details