தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 5, 2021, 12:45 PM IST

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1pm

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

Top 10 news @1pm
ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

வயதில் செஞ்சுரி அடித்த பாட்டி!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐந்து தலைமுறை கண்ட 101 வயது பாட்டியின் பிறந்த நாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தலையொட்டி கொடி அணிவகுப்பு பேரணி!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை கண்காணிப்பாளர் தலைமையில், காவலர்கள் கொடி அணிவகுப்புப் பேரணி நடத்தினர்.

கிருஷ்ணராயபுரத்தில் நாம் தமிழர் வாக்கு சேகரிப்பு!

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தேர்தல் விதிமுறை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும்; ஆட்சியர் எச்சரிக்கை

தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத திருமண மண்டபம், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயும் என நெல்லை ஆட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார்.

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு!

உத்திரமேரூர் அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது மதிக்கத்தக்க புள்ளி மானை அப்பகுதி மக்கள் உயிருடன் மீட்டனர்.

குப்பைக் கிடங்கில் பற்றி எரியும் தீயால் மக்கள் அவதி!

குப்பைக்கிடங்கில் பற்றி எரிந்த தீயால், குடியிப்பு பகுதியில் புகை சூழ்ந்துள்ளதால் மூச்சு திணறல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நகராட்சியின் அலட்சியப் போக்கு.. தீக்கிரையான 7 ஏக்கர் வாழைமரங்கள்..

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால், ஏழு ஏக்கரில் பயிரிடப்பட்டு சாகுபடிக்கு தயாராக இருந்த வாழைமரங்கள் தீக்கிரையாகின.

ரமலான் நாளில் சிபிஎஸ்இ தேர்வு: தேதிகளை மாற்ற மத்திய அரசு பரிசீலனை

ரமலான் நாளன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த, சிபிஎஸ்இ தேர்வின் தேதிகளை மாற்றக்கோரி கடிதம் எழுதியிருந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு மத்திய கல்வி அமைச்சர் பதிலளித்துள்ளார்.

சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு கொடுத்த முதியவர் கைது!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் 68 வயது முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

4ஆவது டெஸ்ட்: ஏமாற்றிய கோலி; நின்று ஆடும் ரோஹித் - இங்கிலாந்தை சமாளிக்குமா இந்தியா?

இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details