தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm - undefined

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

Top 10 news @1pm
ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

By

Published : Mar 4, 2021, 1:03 PM IST

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 17,407பேருக்கு பாதிப்பு!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 17 ஆயிரத்து 407 நபர்களுக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 89 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவேன்: வீரப்ப மொய்லி!

காங்கிரஸ் தலைமை கூறினால் திமுகவிடம் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுவேன் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதி மீறல்: பல்வேறு கட்சியினர் மீது வழக்கு!

பல்வேறு இடங்களில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறி, பல்வேறு கட்சி நிர்வாகிகள் மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதிமுக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பு!

அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்த 8,250 பேருக்கும் இன்று ஒரே கட்டமாக வேட்பாளர் நேர்காணல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஜிப்மர் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை
ஜிப்மர் மருத்துவமனை உயர் அலுவலர்களிடம் சிபிஐ திடீரென விசாரணை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி: கூட்டணி கட்சிகள் தனி தனியாக ஆலோசனை!

திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வரும் நிலையில் இன்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக கட்சிகள் தனி தனியாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு முகாம்!

தர்மபுரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு முகாமை ஆட்சியர் கார்த்திகா தொடங்கிவைத்தார்.

தாயை தேடிச் சென்ற குழந்தை ஏரிக்குட்டையில் மூழ்கி உயிரிழந்த சோகம்

உளுந்தூர்பேட்டை அருகே தாயை தேடிச் சென்ற இரண்டு வயது குழந்தை ஏரிகுட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்: இரண்டாவது சுற்றிற்கு முன்னேறிய இந்திய ஜோடி!

ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் சத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

கர்ணன் டீசர் விரைவில்!

கர்ணன் பட டீசர் விரைவில் வெளியாகும் என நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details