தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்...

Etv bharat top 10 news
ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

By

Published : Nov 27, 2020, 1:17 PM IST

1.பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளனுக்கு பரோலை நீட்டித்து உச்ச நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

2.குற்றப் பத்திரிகையில் பெயரை நீக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட பெண் ஆய்வாளர் கைது!

குற்றப் பத்திரிகையில் இருந்து பெயரை நீக்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்ச கேட்டதாக எழுந்த புகாரின்பேரில், செக்கானூரணி பெண் காவல் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

3.மிக்-29கே விமானம் விபத்து; மாயமான பயிற்சி விமானியின் கதி என்ன?

இந்திய கப்பற்படைக்கு சொந்தமான மிக்-29கே (MiG-29K) பயிற்சி விமானம் விபத்துக்குள்ளாகி அரபிக் கடலில் விழுந்தது. மாயமான பயிற்சி விமானியை தேடும் பணிகள் நடந்துவருகின்றன.

4.கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் தீ: 6 நோயாளிகள் உயிரிழப்பு!

கரோனா அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட தீயில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

5.மேற்கு வங்க தேர்தல்; மூத்தத் தலைவர்களுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை!

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை (நவ.27) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.

6.அரைசதம் விளாசிய ஆஸி. தொடக்க வீரர்கள்... திணறும் இந்திய பந்துவீச்சாளர்கள்..!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸி. அணி 25 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 134 ரன்களை சேர்த்துள்ளது.

7.தொடர் மழை: சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை!

தொடர் மழை காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

8.நேரில் ஆஜராக நேரிடும் - உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரிக்கை!

மாமல்லபுரத்ததை அழகுப்படுத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை தெரிவிக்காவிட்டால் மத்திய, மாநில அரசுத்துறை செயலர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என உயர் நீதிமன்றம் மீண்டும் எச்சரித்துள்ளது.

9.தரமற்ற எண்ணெயை பயன்படுத்தும் உணவகங்கள்: புதிய திட்டத்தின் தொடக்க விழாவில் அம்பலம்

மாவட்டத்தில் தரமற்ற எண்ணெயை பல உணவகங்கள் பயன்படுத்தி வந்தது புதிய திட்டத்தின் தொடக்க விழாவில் அம்பலமானது.

10.இனி எல்லாமே டிஸ்னிதான்... மார்வெல் தொகுப்பு அறிமுகம்!

மார்வெல் பிரியர்களுக்காக பவர் பேங்க், சார்ஜர்கள், ஸ்பீக்கர்கள், ஹெட்ஃபோன்கள், ஹேர் ட்ரையர்கள் உள்ளிட்ட ஸ்பெஷல் டிஸ்னி சாதனங்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details