தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - ETV bharath tamilnadu news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 1 PM
Top 10 news @ 1 PM

By

Published : Nov 20, 2020, 1:15 PM IST

மீண்டும் அதிகரிக்கும் கோவிட்-19 பாதிப்பு : ஒரேநாளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது!

டெல்லி : இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 45 ஆயிரத்து 882 பேர் புதிதாக பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இளைஞர்கள் - அதிர்ச்சி காணொலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திதுண்டு பகுதியில் மூன்று இளைஞர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும்போது வெள்ளநீர் அவர்களை இழுத்துச் சென்றது. இது தொடர்பான காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பு சட்ட தினம் கொண்டாட பல்கலைக்கழக மானியக்குழு உத்தரவு!

இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் வரும் 26 ஆம் தேதி அரசியலமைப்பு சட்ட தினத்தை கொண்டாட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளிடம் அதிகளவு பரவும் கரோனா- யுனிசெஃப்

உலகளவில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நேரடியாக கரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்படுவதாக யுனிசெஃப் உலக குழந்தைகள் தினத்தில் வருத்தம் தெரிவித்துள்ளது.

பாஜக எம்பி, காங்கிரஸ் தலைவர்களுக்கு பிணையில்லா வாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்

லக்னோவின் எம், எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் பாஜக எம்பி ரீட்டா பஹூகுனா ஜோஷி, மூத்த காங்கிரஸ் தலைவர்களான ராஜ் பாப்பர் மற்றும் பிரதீப் ஜெய்ன் ஆதித்யா உள்ளிட்ட ஒன்பது பேருக்கு பிணையில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

'அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசு ஏற்க வேண்டும்'

7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீட்டின் வழியே தனியார் மருத்துவக் கல்லூரிகளை தேர்ந்தெடுத்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கப்பல் லைவ் ஸ்ட்ரீமிங்கில் சிக்கிய பச்சை நிற விண்கல்!

சிட்னி: ஆர்வி இன்வெஸ்டிகேட்டருக்கு சொந்தமான கப்பல் டாஸ்மேன் கடலில் சென்று கொண்டிருக்கையில், கப்பலின் லைவ் ஸ்ட்ரீமிங் கேமராவில் பச்சை நிற விண்கல் செல்லும் அபூர்வ காட்சி படம்பிடிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நிரம்பிய ஏரிகள்!

சென்னை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 133 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

இனி இந்த வயசு ஆனாதான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் - ஐசிசி திட்டவட்டம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் குறைந்தபட்சம் வயது வரம்பை ஐசிசி நிர்ணயித்துள்ளது

டிசம்பர் வார இறுதியில் இலவச சேவை வழங்கும் நெட்ஃபிளிக்ஸ்

புதுடில்லி: ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் டிசம்பர் 5-6ஆகிய இரண்டு நாள்களுக்கு இலவச சேவையை வழங்குகிறது.

ABOUT THE AUTHOR

...view details