தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM
1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

By

Published : Oct 11, 2020, 1:20 PM IST

1. இந்தியாவில் 70 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 74 ஆயிரத்து 383 நபர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

2. தேச, மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டவர் ஜே.பி. - பிரதமர் மோடி புகழாரம்

தேசம், மக்கள் நலனை மட்டுமே கருத்தாகக் கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் என ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

3. பெரும்பாலான இந்தியர்கள் தலித்துகளை மனிதர்களாக கருதுவதில்லை - ராகுல் வேதனை

டெல்லி: ஹத்ராஸ் விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பெரும்பாலான இந்தியர்கள் தலித்துகளை மனிதர்களாக கருதுவதில்லை என ராகுல் வேதனை தெரிவித்துள்ளார்.

4. "தலித் ஊராட்சித் தலைவரை தரையில் அமர வைத்தது கண்டிக்கத்தக்கது" - கே.என். நேரு

திருச்சி: கடலூரில் தலித் ஊராட்சித் தலைவரை தரையில் அமர வைத்தது கண்டிக்கத்தக்கது என்று திமுக முதன்மைச் செயலாளர் கே. என். நேரு கூறினார்.

5. மக்களால் உயிர்பெறும் சிறு வணிகர்கள் - நேற்று ‘பாபா கா தாபா’ இன்று ‘கஞ்சி பாடா’

கரோனாவால் தொழிலை இழந்த தவித்த 80 வயது முதியவரின் துயரத்தை படம்பிடித்து, சமூக வலைதளங்களில் ஒருவர் பதிவிட, அவரின் உணவகமான ‘பாபா கா தாபா’ பிரபலமடைந்தது. அதேபோல் தற்போது 90 வயது முதியவரின் சிற்றுண்டி கடையான ‘கஞ்சி பாடா’ பிரபலமடைந்துவருகிறது.

6. பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அதிரடி மாற்றம்: புதிய கல்விக் கொள்கை ஆய்வு குழுவில் நீடிப்பாரா?

சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் ஆணையராக கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி நியமிக்கப்பட்ட சிஜி தாமஸ் வைத்யன் ஒரு ஆண்டைகூட முழுவதுமாக பூர்த்தி செய்யாத நிலையில், அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

7. பொதுமக்களின் புகார்... புதிய முறையில் தீர்வு காணும் நாகை காவல்துறை

நாகப்பட்டினம்: பொதுமக்களின் புகார்கள் மீது அவர்களின் வீடுகளுக்கே சென்று தீர்வு அளிக்கும் புதிய முறையை நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறை பின்பற்றுகின்றனர்.

8. இயக்குநர் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்ட சந்தோஷ் பி. ஜெயக்குமார்!

சென்னை: தான் பேசிய கருத்திற்கு வருந்தி சந்தோஷ் பி. ஜெயக்குமார், இயக்குநர் பாரதிராஜாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

9. அமிதாப் பிறந்தநாள்- மணல் சிற்பத்தை வடிவமைத்து அசத்திய மணல் சிற்பக் கலைஞர்

பாலிவுட் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவர் இன்று(அக்.11) தனது 78ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி ரசிகர்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், அமிதாப் பச்சனின் உருவத்தை பிரமாண்ட மணல் சிற்பமாக வடித்துள்ளார்.

10. புதுப்பட்டினத்தில் ரூ. 16.80 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளங்கள்

சென்னை: புதுப்பட்டினம் உய்யாலிகுப்பம் பகுதியில் 16.80 கோடி ரூபாய் மதிப்பில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும் என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details