தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

By

Published : Jun 22, 2020, 1:05 PM IST

சாதி மறுப்புத் திருமணம்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு கடந்துவந்த பாதை!

திருப்பூர்: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில், சங்கர்-கௌசல்யா சாதி மறுப்புத் திருமணம் முதல் மூவர் விடுதலை வரை நிகழ்ந்தவை குறித்து ஒரு பார்வை.

இந்திய எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

'மிரட்டுகிறார்கள், பாதுகாப்புத் தாங்க' - மக்களவைத் தலைவருக்கு எம்.பி. கோரிக்கை

அமராவதி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கண்ணுமுரி ராம கிருஷ்ண ராஜு, தன்னை ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிலர் மிரட்டுவதாகக் கூறி தனக்குப் பாதுகாப்பு வழங்குமாறு மக்களவைத் தலைவருக்குக் கோரிக்கைவிடுத்துள்ளார்.

கர்நாடகாவில் அவசரக் கூட்டம்: எடியூரப்பா அழைப்பு!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அம்மாநில முக்கிய அலுவலர்களுக்கு கரோனா தொடர்பாக ஆலோசிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஆந்திராவில், 26 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்

ஆந்திரா: ஸ்ரீகாகுளத்தில் உள்ள புருஷோத்தபுரம் சோதனைச் சாவடியில் ஒரு கன்டெய்னரில் இருந்து 26 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில், 3 மாதத்தில் ஆறு லட்சம் பேர் கைது!

சென்னை: கரோனா ஊரடங்கை மீறியதாக கடந்த மூன்று மாதத்தில் ஆறு லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'ரசிகர்களின் அண்ணன், மக்களின் கலைஞன், தன்னைத்தானே செதுக்கிய தமிழ் சினிமாவின் தளபதி'

இன்று 'உலகநாயகன்' என்று கமல் ஹாசனையும், 'சூப்பர் ஸ்டார்' என்று ரஜினியையும், 'தல' என்று அஜித்தையும் ரசிகர்கள் புனைப்பெயர் வைத்து அழைக்கலாம். ஆனால் அண்ணா, இளைய தளபதி, தளபதி, தலைவா, என பல பெயர்களால் ரசிகர்கள் வெறித்தனமாய் அழைப்பது விஜய்யை மட்டுமே.

ஜான் போல்டனின் புத்தகம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியீடு!

வாஷிங்டன் : முன்னாள் அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் எழுதிய 'தி ரூப் வேர் இட் ஹேப்பண்ட்' புத்தகம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது.

'மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது' - ரஷ்ய அதிபர் புடின்

மாஸ்கோ: 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை குறைவு: பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு!

டெல்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், கடந்த 16 நாள்களில் பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாய் 30 காசும், டீசல் 9 ரூபாய் 46 காசும் உயர்வைக் கண்டுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details