தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - etv bharat tamil top 10

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-1pm
top-10-news-at-1pm

By

Published : Jun 19, 2020, 1:22 PM IST

இந்தியா- சீனா மோதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

டெல்லி: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்புவிடுத்துள்ளார்.

8 மாநிலங்கள், 19 இடங்கள், வெல்லப்போவது யாரு? மல்லுக்கட்டும் காங்கிரஸ், பாஜக!

டெல்லி: எட்டு மாநிலங்களில் காலியாகவுள்ள 19 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது.

13ஆவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

டெல்லி: வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு 56 பைசாவும், டீசல் லிட்டருக்கு 63 பைசாவும் உயர்ந்துள்ளது.

’ராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்’ - எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் திட்டவட்டம்

ஜெய்ப்பூர்: இந்திய எல்லைப் பகுதியில் ஏதேனும் அத்துமீறல்கள் நடந்தால் இந்திய ராணுவ வீரர்களுக்கு அனைத்து வகையிலும் துணை நிற்போம் என ராஜஸ்தான் மாநிலத்தின் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

'உணர்ச்சியைக் காட்டிலும் பகுத்தறிவின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்' - அருண் துமல்

டெல்லி: 'சீன தயாரிப்புகளை இங்கு விற்க அனுமதிக்கும்போது, ​​பணத்தின் ஒரு பகுதி இந்திய பொருளாதாரத்திற்கு திரும்பிவரும்; அது நல்லதுதானே. பிசிசிஐ சீனர்களுக்குப் பணம் கொடுக்கவில்லை, மாறாக அதை ஈர்க்கிறது' என்று ஐபிஎல் பொருளாளர் அருண் துமல் கூறியுள்ளார்.

ரஜினிக்கு கொலைமிரட்டல் விடுத்த சிறுவன் சிக்கினான்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளான்.

பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார்.

முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சென்னை!

சென்னை: அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு காரணமாக சென்னை மாநகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

விஜயை செதுக்கும் அவரது கதாபாத்திரங்கள் : வைரலாகும் பிறந்தநாள் போஸ்டர்

சென்னை: வருகிற 22ஆம் தேதி நடிகர் விஜய் தனது 46ஆவது வயதில் அடி எடுத்து வைக்கும் நிலையில், அவரது பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை ’மாஸ்டர்’ திரைப்பட இணைத் தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிட்டுள்ளார்.

நியூசி.யில் துப்பாக்கிச் சூடு: காவலர்கள் இருவர் படுகாயம்!

வெலிங்டன்: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் காவலர்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details