தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

பீலா ராஜேஷ்
பீலா ராஜேஷ்

By

Published : Jun 12, 2020, 1:06 PM IST

'சென்னைக்கு இ-பாஸ் நிறுத்தம்; தகவல் தவறு' - தமிழ்நாடு அரசு

சென்னையில் ஊரடங்கை நூறு விழுக்காடு தீவிரப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை. நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறையில் மாற்றம்: மீண்டும் காலடி எடுத்துவைத்த ஜெ. ராதாகிருஷ்ணன்!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலராக இருந்த பீலா ராஜேஷ் மாற்றப்பட்டு அத்துறைக்கு ஜெ. ராதாகிருஷ்ணன் முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கும்பகோணம் தீ விபத்து முதல் கரோனா தடுப்புப் பணி வரை - யார் இந்த ஜெ. ராதாகிருஷ்ணன்?

தமிழ்நாட்டின் புதிய சுகாதாரத் துறை செயலராக ஜெ. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் குறித்த சிறு தொகுப்பு...

கரோனா: குழந்தைகளின் எதிர்காலம் குறித்து 85% பெற்றோர்கள் அச்சம்

மும்பை: இந்தியாவில் கரோனா பெருந்தொற்று பரவலுக்குப்பின் 85 விழுக்காடு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் வாழ்க கோஷம் எழுப்பிய மாணவிக்கு கிடைத்தது பிணை

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று பாகிஸ்தான் வாழ்க என்ற முழக்கம் எழுப்பிய மாணவி அமுல்யா லியோனாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் பிணை வழங்கியது.

கரோனா நோயாளிக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை: சாதித்துக்காட்டிய இந்திய வம்சாவளி!

சிகாகோ: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இந்திய வம்சாவளி மருத்துவர் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து அவரை கரோனா நோயிலிருந்து காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளம் எல்லையில் துப்பாக்கிச்சூடு: இந்தியர் பலி!

இந்திய - நேபாளம் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிக்கி இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிசெலுத்துவோரின் எதிர்பார்ப்பு என்ன?

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. வரி செலுத்துவோரின் கோரிக்கைகள் பல உள்ள நிலையில் அவை நிறைவேற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கமலின் அன்பே சிவத்தை மிஞ்சிய பிரேம்ஜியின் ட்விட்டர் பதிவு

வித்தியாசமான, விநோதமான ட்விட்களால் அவ்வப்போது ஆஜராகி ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தி வரும் நடிகர் பிரேம்ஜி, இன்று ஒரு ட்விட்டுடன் ரசிகர்களுக்கு கருத்து கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் மாணவரின் 'அடியே குட்டி தேவதை' சுயாதீன இசைப் பாடல் வெளியீடு

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் இசைக் கல்லூரியின் மாணவர் எட்வின் லூயிஸின் 'அடியே குட்டி தேவதை' எனும் சுயாதீன இசைப் பாடலை திங்க் மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details