தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - பிரீமியர் லீக் தொடர்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @1PM
Top 10 news @1PM

By

Published : Jun 5, 2020, 1:00 PM IST

4 மாத குழந்தைக்கு பால் வழங்கிய மனிதநேய காவலருக்கு அமைச்சர் சன்மானம்!

டெல்லி: நான்கு மாத குழந்தைக்கு பால் பாக்கெட் வழங்கிய ரயில்வே காவலரின் மனிதநேயத்தை பாராட்டி ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சன்மானம் அறிவித்துள்ளார்.

'மங்காத்தா சூதாட்டம்' போடும் அதிமுக அரசு - ஸ்டாலின் காட்டம்!

சென்னை: கரோனா ஊரடங்கு காலத்திலும் கூடுதல் மின் கட்டணம் வசூலித்து அதிமுக அரசு “மங்காத்தா சூதாட்டம்” போடுவது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மும்பை தமிழர்கள் தாயகம் திரும்ப சிறப்பு ரயில்களை இயக்க வலியுறுத்தி கே.எஸ்.அழகிரி கடிதம்!

சென்னை : மும்பை வாழ் தமிழர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர தென்னக ரயில்வேயுடன் இணைந்து சிறப்பு ரயில்களை இயக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை விடுத்துள்ளார்.

கரோனா: அலுவலகங்களுக்கான நிலையான இயக்க நெறிமுறைகள் வெளியீடு!

டெல்லி: அலுவலகங்களில் கரோனா பரவலைத் தடுக்க நிலையான இயக்க நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மதுரையில் சந்தேகத்திற்கிடமாக சிறுவன் உயிரிழப்பு - பாலியல் துன்புறுத்தல் காரணமா?

மதுரை: மேலூர் அருகே 16 வயது சிறுவன் பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்பட்டு, சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பால் முகவர்களிடம் 32 லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்த தம்பதி கைது!

கடலூர்: பால் முகவர்களிடம் 32 லட்சம் ரூபாய் ஏமாற்றி மோசடி செய்த தம்பதியைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

பிகிலை முறியடித்த 'மாஸ்டர்'

கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' திரைப்படத்தின் OTT விலையை 'மாஸ்டர்' திரைப்படம் முறியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரீமியர் லீக் தொடரில் ஐந்து மாற்று வீரர்களுக்கு அனுமதி!

கரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் ஜூன் 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.

ஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்கிறது அமேசான்!

டெல்லி: பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் 200 கோடி டாலருக்கு பங்குகளை விலைக்கு வாங்க அமேசான் நிறுவனம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தை அமெரிக்க பெருநிறுவனங்கள் குறிவைத்து முதலீடு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகவல் உறுதிப்படுத்துகிறது.

முன்பு 'சமோசா'... இப்போ 'குஜராத் கிச்சடி' கலக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர்!

கான்பெரா: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் மோடியிடம் குஜராத் கிச்சடி உங்களுக்கு செய்து தருகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details