தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @1PM
Top 10 news @1PM

By

Published : Jun 4, 2020, 1:30 PM IST

Updated : Jun 4, 2020, 1:37 PM IST

புதுக்கோட்டை சிறுமி கொலை வழக்கு: பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டை: நரபலி கொடுப்பதற்காக 13 வயது சிறுமி கொலைசெய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டுவந்த பெண் மந்திரவாதி, அவரது உதவியாளரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

டெல்லி அருகே லேசான நிலநடுக்கம்!

டெல்லி: நொய்டா அருகே நேற்று இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

அரசின் அறிவிப்புகளால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் - அனுராக் தாக்கூர் நேர்காணல்

நடுத்தர வர்க்கத்தினருக்கு அரசு அறிவித்த சலுகைகள் என்ன, ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தால் சந்தையில் தேவை அதிகரிக்குமா, நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதித் துறை மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை இணையமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் நமது ஈடிவி பாரத்துக்கு பதிலளித்துள்ளார்.

உள்நுழைவு அனுமதி கோரி வழக்கு: மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவு!

டெல்லி: வங்காள கிழக்கு எல்லை ஒழுங்குமுறைத் திருத்தம் (2019) மூலம் அஸ்ஸாமுக்கு உள்நுழைவு அனுமதியை மறுத்த குடியரசுத் தலைவரின் உத்தரவை தடைசெய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

'டெல்லி அரசுடன் கலந்தாலோசித்து எல்லை திறப்பது குறித்த முடிவு எடுக்கப்படும்'

சண்டிகர்: தலைநகர் டெல்லியுடனான எல்லையை திறந்துவிடுவது குறித்த முடிவுகள் அம்மாநில அரசுடன் கலந்தாலோசித்த பின்னர் அறிவிக்கப்படும் என ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
சைக்கிள் ஓட்டியே ஆக வேண்டுமா..? அதன் சக்கரங்கள் கூறும் கதையைக் கேட்போம்!

உலக சைக்கிள் தினத்தில், அதன் முக்கியத்துவம், நன்மைகள், ஏன் அது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்க வேண்டும்? மேலும் அது கடந்து வந்த பாதையை இந்தத் தொகுப்பில் காணலாம்.

நிசார்கா புயலால் படகில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தை தாக்கிய நிசார்கா புயலால் படகில் சிக்கித்தவிக்கும் நபர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

கருணாநிதி பிறந்தநாள்: பலூன்களைப் பறக்கவிட்ட திமுகவினர்

சேலம்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு திமுகவினர் மலர் மாலை அணிவித்து மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

'இங்கிலாந்து அணியை வழிநடத்தும் திறன் ஸ்டோக்ஸிற்கு உண்டு' -ஜோ ரூட்

இங்கிலாந்து அணியை வழிநடத்தும் திறன் பென் ஸ்டோக்ஸிற்கு உண்டு என அந்த அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

நம்பர் 1 குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் சிறப்பு பேட்டி!

உலகின் நம்பர் 1 குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் ஈடிவி பாரத் செய்திகளுக்காக சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

Last Updated : Jun 4, 2020, 1:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details