தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்...

By

Published : Jul 11, 2021, 11:15 AM IST

top 10 news@11am
top 10 news@11am

1. அம்மா குடிநீர் : மீண்டும் விற்பனை செய்ய கோரிக்கை

அம்மா குடிநீர் திட்டத்தை, தமிழ்நாடு அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2. போராடு... அதற்கான உரிமை உண்டு' - உயர் நீதிமன்றம் கருத்து

தங்களின் பொதுத் தேவைக்காக போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.

3. கோப்பையை கைப்பற்றிய அர்ஜென்டினா

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை 28 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கைப்பற்றியது.

4. மக்கள் மன்ற நிர்வாகிகளைச் சந்திக்கிறார் ரஜினி

வரும் 12ஆம் தேதி மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கிறார்.

5. கோவாக்சின் தடுப்பூசிக்கு 4-6 வாரங்களுக்குள் உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்?

கோவாக்சின் மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து, இன்னும் நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

6. நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு - முன்னாள் எம்பி மைத்ரேயன்

நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளின் நிலைப்பாடு என அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.

7. கேரளா, மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரிப்பு - விரையும் மத்திய குழு

கேரளா, மகாராஷ்டிராவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், அங்கு மத்திய ஆய்வு குழுவை சுகாதாரத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

8. டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்: பார்வையாளர்களின்றி நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள்!

ஜப்பான் தலைநகர், டோக்கியோவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பார்வையாளர்கள் இன்றி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன.

9. அரசுக்கு சொந்தமான நவீன அரிசி ஆலையை திறக்க கோரிக்கை

திருவாரூரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தமிழ்நாடு நவீன அரிசி ஆலையை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10. இயக்குநர் பாலா பிறந்தநாள்

தமிழ் இயக்குநர்களில் முன்னனி இயக்குநரான பாலா தனது பிறந்தநாளை இன்று (ஜூலை 11) கொண்டாடுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details