தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11 Am - ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்..

Top 10 news @ 11AM
Top 10 news @ 11AM

By

Published : Jan 15, 2021, 11:21 AM IST

சரித்திரம் படைத்த 'சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸ்' நடராஜன் தங்கராசு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் தங்கராசு பங்கேற்றதன் மூலம், இந்தியா சார்பில் ஒரே தொடரில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்ற முதல் நபர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடக்கம்!

டெல்லி: நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் இன்று தொடங்க உள்ளன.

சென்னை டாக்ஸ் சேனலின் வீடியோக்களை நீக்கிய யூ-ட்யூப்

சென்னை: பணம் கொடுத்து ஆபாசமாகப் பேச வைத்து எடுத்த வீடியோவை, ஒளிபரப்பிய சென்னை டாக்ஸ் சேனலின் வீடியோக்களை யூ-ட்யூப் நிறுவனம் நீக்கியுள்ளது

'இந்திய இளைஞர்கள் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும்' - வள்ளுவரை வணங்கி பிரதமர் மோடி ட்வீட்

பிரதமர் நரேந்திர மோடி திருவள்ளுவர் தினத்திற்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியினைப் பதிவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் சர்ச்சையைக் கிளப்பும் சி.டி. அரசியல்... பிளாக்மெயில் செய்யப்பட்டாரா முதலமைச்சர்?

பெங்களூரு: சமீபத்தில் கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், தன்னை மிரட்டியவர்களுக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே எடியூரப்பா அமைச்சர் பதவி அளித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காங்கேயம் பசுவை பரிசாகக் கொடுப்பதன் பின்னணி: ஜல்லிக்கட்டு ஆர்வலர் பகிர்வு

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு காங்கேயம் பசு, கிடாரி கன்று ஆகியவை பரிசாக வழங்கப்பட உள்ளன. இதன் பின்னணி குறித்து ஜல்லிக்கட்டு ஆர்வலர் பொன்.குமார் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

தடுப்பூசிப்போடும் பணி குறித்த முக்கிய தகவல்கள் என்னென்ன... பகிர்ந்துகொள்ளும் சுகாதாரத்துறைச் செயலாளர்!

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் மருத்துவமனை கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசிப் போடும் பணி தொடங்குகிறது எனத் தெரிவித்தார்.

தார்வாடில் கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!

தாட்வாடில் டிப்பர் லாரி ஒன்று, பயணிகளுடன் சென்ற டெம்போ டிராவலர் வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக சங்கராந்தி கொண்டாடாத கிராமம்: காரணம் என்ன?

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள கிராமம் ஒன்று பல நூற்றாண்டுகளாக சங்கராந்தி கொண்டாடமல் இருக்கின்றனர்.

இந்தியப் பயனர்களுக்கென பிரத்யேக அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் ப்ளான்!

அமேசான் நிறுவனத்தின் 'அமேசான் ப்ரைம் வீடியோ' தளத்துக்கான பிரத்யேக கைப்பேசி சந்தா சேவை, இந்திய பயனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு அறிமுக சலுகையாக மாதத்திற்கு ரூ.89 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details