தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-11am
top-10-news-at-11am

By

Published : Jul 2, 2020, 11:01 AM IST

இந்தியா - சீனா விவகாரம்: 12 மணிநேரம் உயர்மட்ட பேச்சுவார்த்தை

டெல்லி: இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக இருதரப்பு கமாண்டர்கள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தை சுமார் 12 மணிநேரம் நீடித்தது.

அகமதாபாத்தில் இந்தியாவின் முதல் ப்ளாஸ்மா வங்கி!

அகமதாபாத்: நாட்டிலேயே முதன்முறையாக கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ப்ளாஸ்மா வங்கி குஜராத் மாநிலத்தின் தலைநகரான அகமதாபாத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி மருந்து தான்; கரோனா மருந்து அல்ல!

டெல்லி: யோகா குரு ராம்தேவின் நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேத், சில தினங்களுக்கு முன் கரோனாவுக்கான மருந்து 'கரோனில்' என்றுகூறி அதனை சந்தைப்படுத்தி வந்தனர். தற்போது அம்மருந்தை நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்தாக மட்டும் சந்தைப்படுத்த மத்திய அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

பை பாப் (BiPAP) வசதி கொண்ட மேட் இன் இந்தியா வென்டிலேட்டர்!

டெல்லி: நாட்டில் விநியோகிக்கப்பட்டுள்ள மேட் இன் இந்தியா வென்டிலேட்டரில் பை பாப் (BiPAP) வசதியில்லை என்ற குற்றச்சாட்டு சமூக ஊடகங்களில் பரவி வந்த நிலையில், இதனை சுகாதார அமைச்சம் மறுத்துள்ளது.

ஜூலை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அரசு அறிவிப்பு

சென்னை: ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அரசு அறிவித்துள்ளது.

பானுமதி ராமகிருஷ்ணா படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சென்னை: 'பானுமதி ராமகிருஷ்ணா' என்ற பெயரில் வெளியாகவிருக்கும் திரைப்படம் நடிகை பானுமதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் கைது!

தூத்துக்குடி: காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை-மகன் அடுத்தடுத்து மரணித்ததையடுத்து தலைமறைவாக இருந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தற்போது கைதுசெய்யப்பட்டார்.

'ஸ்டாலின் முயற்சியில் இணைந்த ரஜினிக்கு நன்றி'- உதயநிதி ட்வீட்

சென்னை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

700ஆவது கோல் அடித்து சாதனையாளர்களின் பட்டியலில் இணைந்த மெஸ்ஸி!

லா லிகா கால்பந்து தொடரில் அத்லெடிக்கோ மாட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடித்ததன் மூலம் சர்வதேச அளவில் 700ஆவது கோல் அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையை பார்சிலோனா அணியின் கேப்டன் மெஸ்ஸி படைத்துள்ளார்.

சீன செயலிகள் தடை... அமெரிக்கா வரவேற்பு!

வாஷிங்டன்: சீனாவின் 59 செயலிகளை இந்தியா தடை செய்துள்ள நடவடிக்கையை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details