தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-11am
top-10-news-at-11am

By

Published : Jun 30, 2020, 11:07 AM IST

'இந்திய விவரங்களைப் பகிர்ந்ததில்லை; பகிரப்போவதுமில்லை' - செயல்பட அனுமதி கோரும் டிக்டாக்!

டெல்லி: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் கூகுள், ஆப்பிள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தடை குறித்து டிக்டாக்கின் இந்திய தலைமை விளக்கமளித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் சுட்டுவீழ்த்தப்பட்ட 2 பயங்கரவாதிகள்!

ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.

தாஜ் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மும்பை தாஜ் ஓட்டலுக்கு பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 எதிரொலி: கல்வியில் புதிய கருவிகளின் தேவை குறித்து நிதிக்குழு ஆலோசனை!

டெல்லி: கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியில் கல்வியில், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பிற தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்து 15ஆவது நிதிக்குழு ஆலோசனை நடத்தியது.

திமுக எம்எல்ஏ குடும்பத்தினருக்கு கரோனா: மகள் திருமணத்தில் பரவியதா?

விருதுநகர்: திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்தில் அவரது மகள் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது.

சாலையின் நடுவே முதியவரைத் தாக்கும் காவலர்: வைரல் காணொலி

திருச்சி: கன்டோன்மென்ட் பகுதி சாலையில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவரை நிறுத்தி காவலர் ஒருவர் தாக்கும் காணொலி வைரலாகிவருகிறது.

இறைச்சி வியாபாரிகள் சங்கத்தில் ரூ.61.5 லட்சம் திருட்டு: இருவர் கைது!

இறைச்சி வியாபாரிகள் சங்கத்தில் பூட்டை உடைத்து ரூ.61.50 லட்சம் கொள்ளையடித்த இரண்டு இளைஞர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

வழக்கமான ரயில் சேவை எப்போது? - ரயில்வே துறை பதில்

டெல்லி: வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்பது குறித்து ரயில்வே துறையின் செய்தித் தொடர்பாளர் டி.ஜே. நரேன் பதிலளித்துள்ளார்.

'இதுக்கெல்லாமா விளம்பரம்? கஷ்டகாலம்' - தமிழ்நாடு காங். தலைமையை சாடும் கஸ்தூரி!

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் உயிரிழப்பு சந்தேகத்தைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இறந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க வருவதாக ஒட்டப்பட்ட சுவரொட்டியை நடிகை கஸ்தூரி விமர்சித்துள்ளார்.

ஐசிசி தலைவர் தேர்தல் ரேஸில் குதித்த கேமரூன்

கிங்ஸ்டன்: ஐசிசி தலைவருக்கான தேர்தல் விரைவில் நடக்கவுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் டேவ் கேமரூன் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details