தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-11am
top-10-news-at-11am

By

Published : Jun 27, 2020, 11:16 AM IST

'கரோனாவை எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை'- ராகுல் காந்தி

டெல்லி: கரோனா வைரசை எதிர்கொள்ள மத்திய அரசிடம் எந்தத் திட்டமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

'ஆம்! சமூகப் பரவல்தான், அதனை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்' - கோவா முதலமைச்சர்

பனாஜி: கோவாவில் கோவிட்-19, சமூகப் பரவலாக மாறிவிட்டதாக அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தொழில் தொடங்க இதுவே சரியான தருணம் - நிதின் கட்கரி

டெல்லி: மத்திய அரசு அறிவித்துள்ள திட்டத்தைப் பயன்படுத்தி பெண்கள் புதிய தொழில்கள் தொடங்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார்

சிறையில் உயிரிழந்த மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி

மும்பை: மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூசுப் மேனன் சிறையிலேயே உயிரிழந்தார்.

கல்வான் தாக்குதலில் வீரமரணம்: ஒரே வாரத்தில் காப்பீட்டு தொகை வழங்கிய எஸ்.பி.ஐ!

ராம்கார்க் (ஜார்கண்ட்): கல்வான் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு செல்லவேண்டிய காப்பீட்டு தொகையை எஸ்.பி.ஐ., வங்கி ஒரே வாரத்தில் வழங்கியது.

கரோனா தடுப்புப் பணிகளில் திருநங்கையர்: எஸ்.பி. வேலுமணி தகவல்!

சென்னை: சென்னை மாவட்ட கரோனா தடுப்புப் பணிகளில் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஈடுபட்டுவருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

கங்குலி - டிராவிட் பார்ட்னர்ஷிப் அப்போது மட்டுமல்ல, இப்போதும் முக்கியம்

பிசிசிஐ தலைவர் கங்குலி, தேசிய கிரிக்கெட் அகாதமி தலைவர் ராகுல் டிராவிட் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அப்போது மட்டுமல்ல இப்போதும் மிக முக்கியம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு விமான சேவையை அதிகரிக்க அரசு ஒப்புதல்

டெல்லி: இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டுப் பயணிகள் விமானங்களின் எண்ணிக்கையை 45 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் நாளொன்றுக்கு 40 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!

நியூயார்க்: அமெரிக்காவில் நாளொன்றுக்கு கரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கூட்டம்! கடன் குறித்த அறிவிப்புகள் எதுவும் இல்லை!

கரோனா நோய்க் கிருமித் தாக்கத்தை தொடர்ந்து ரிசர்வ் வங்கி நடத்தும் முதல் இயக்குநர் குழுக் கூட்டம் ஜூன் 26ஆம் தேதி நடந்தது.

ABOUT THE AUTHOR

...view details