தமிழ்நாடு

tamil nadu

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : Jun 24, 2020, 10:58 AM IST

Published : Jun 24, 2020, 10:58 AM IST

top-10-news-at-11am
top-10-news-at-11am

கரோனா தடுப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாட்டில் கரோனா தடுப்புப் பணிகளின் நிலை குறித்து காணொலி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையை தொடங்கினார்.

விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் இறப்பு: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

தூத்துக்குடி: சிறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலை.யில் ஓபிசி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம் உயர்வு: திமுக கண்டனம்

டெல்லி: பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தைவிட ஓபிசி மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை இரு மடங்கு அதிகரித்திருக்கும் டெல்லி பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

மே.வங்கத்தில் கரோனா பாதித்த எம்எல்ஏ உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஆளுங்கட்சி (திரிணாமுல் காங்கிரஸ்) எம்எல்ஏ தமோனாஷ் கோஷ் உயிரிழந்தார்.

'தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணிக்காகத் தேடிவந்தார்கள்'- பட்னாவிஸ்

புனே: தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கூட்டணிக்காக எங்களைத் தேடிவந்தார்கள். ஆனால், சிவசேனாவுடனான கூட்டணியை முறிக்க பாஜக தலைவர்கள் விரும்பவில்லை என்று மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

இந்திய-சீன மோதலை தணிப்பதற்கு ரஷ்யாவின் பங்கு முக்கியம்!

டெல்லி: "இந்தியாவுடன் போர்த்திறன் கூட்டுறவில் இருப்பதால் இந்தியா பின்னடைவதை ரஷ்யா விரும்பாது, அதே நேரம் உலகின் சக்திவாய்ந்த ஒரே நாடாக சீனா இருப்பதையும் ரஷ்யா விரும்பவில்லை" என்று பாதுகாப்புத் துறை வல்லுநர் க்வாமர் அகா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலையேற்றத்துக்கு எதிராக, காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

மேலும் 7 பாக். வீரர்களுக்கு கரோனா!

பாகிஸ்தான் அணியில் மேலும் ஏழு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அவ்வணியில் பாதிப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் பலி!

மெக்சிகோ நகரம்: மெக்சிகோ நாட்டின் ஒக்ஸாகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இதய நோயாளிகளுக்கு நுரையீரல் அடைப்பை கண்டறிய உதவும் செயலி!

இதய செயலிழப்பு நோயாளிகளுக்கு நுரையீரல் அடைப்பை முன்கூட்டியே கண்டறிய செயலி உதவுகிறது. நோய்வாய்ப்பட்டவர்கள், நோயற்றவர்கள் ஆகிய இருவரின் குரல் மாதிரிகளை எடுத்து, செயலி மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து வெற்றி கண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details