தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11am - தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @11am
Top 10 news @11am

By

Published : Jun 9, 2020, 10:57 AM IST

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்தாகிறது?

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்துவிட்டு அனைவரையும் தேர்ச்சிசெய்து அரசு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்பவரா நீங்கள்? - அப்படின்னா இது உங்களுக்கான நற்செய்திதான்!

டெல்லி: NIL ஜிஎஸ்டி தாக்கல்செய்யும் வாடிக்கையாளர்களுக்குச் சேவையை எளிமையாக்கும் வகையிலான அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

நோயால் பாதிக்கப்படலாம் என கணக்கிடப்பட்டவர்கள் தொடர்ந்து கண்காணிப்பு

சென்னை: சென்னையில் நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள 3.47 லட்சம் நபர்களை தொடர்ந்து அரசு கண்காணித்து வருகிறது என அமைச்சர்கள் குழு தெரிவித்துள்ளது

150 அடி ஆழ கிணற்றிலிருந்து அழுகுரல்... மீட்கப்பட்டும் 4 வயது சிறுவன் உயிரிழப்பு!

தேனி: வடபுதுப்பட்டியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் தண்ணீரில்லாத 150 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிரிழந்தான்

பிரிட்டனில் நிறவெறிக்கு எதிராகப் போராட்டம் : சத்யஜித் ரேவின் படத்தை நினைவூட்டுவதாக பாலிவுட் இயக்குநர் ட்வீட்

மும்பை : பிரிட்டனில் நடைபெற்ற நிற வெறிக்கு எதிரான போராட்டம் மறைந்த இயக்குநர் சத்யஜித் ரேவின் ஹிரோக் ராஜர் தேஷி படத்தை நினைவூட்டுவதாக பாலிவுட் இயக்குநர் ஷூஜித் சிர்கார் ட்வீட் செய்துள்ளார்.

"நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை"- பவுலோ டிபாலா

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுவந்திருந்தாலும், இன்னும் முழுமையாக குணமடையவில்லை என யுவென்டஸ் கால்பந்து அணியின் முன்கள வீரர் பவுலோ டிபாலா தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட் - தலைவர்கள் இரங்கல்

ஜம்முவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் ஒருவர் தீவிரவாதிகளால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஈரானில் சிக்கியவர்களை மீட்கச் சென்ற கப்பற்படை

டெல்லி: ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை சமுத்திர சேது திட்டத்தின் கீழ் மீட்க இந்திய கப்பற்படையைச் சேர்ந்த கப்பல் சென்றுள்ளது.

NIL ஜிஎஸ்டியை குறுஞ்செய்தி மூலம் தாக்கல்செய்யும் நடைமுறை!

NIL ஜிஎஸ்டியை குறுஞ்செய்தி மூலம் எளிய முறையில் தாக்கல்செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனைத் தாக்கல்செய்யும் நடைமுறையைப் பற்றி காணலாம்.

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் நுழைந்த ரவுடி கும்பல் - பிரிட்டன் பிரதமர் குற்றச்சாட்டு

லண்டன்: நிறவெறிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததற்கு அப்போராட்டத்தில் ரவுடி கும்பல் நுழைந்ததே காரணம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details