தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11AM - international

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 pm
11 pm

By

Published : Sep 14, 2020, 11:31 AM IST

சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

சென்னையில் செவ்வாய்க்கிழமை (15.09.2020) மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகளுக்காக ஏற்படுத்தப்படும் இந்த மின் தடையில் எந்தெந்த நேரங்களில் இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

நீட் வேண்டாம்: நாடாளுமன்றத்தில் பதாகைகள் ஏந்தி திமுக எம்.பி.க்கள் போராட்டம்

டெல்லி: திமுக, கூட்டணி கட்சி எம்.பி.க்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'நீட் தேர்வை ரத்து செய்' வாசங்கள் அடங்கிய முகக்கவசத்துடன் சட்டப்பேரவைக்கு வந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்!

பேரவையில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பெற்றோரின் எதிர்பார்ப்பே மாணவர்களின் தற்கொலைக்கு காரணம் - ஆர்.பி. உதயகுமார்

மதுரை: தமிழ்நாட்டில் மாணவர்களின் தற்கொலை அதிகரிக்க பெற்றோரின் எதிர்பார்ப்பே காரணம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.

போதை பொருள் வழக்கு: நடிகை சஞ்சனா, ராகினியின் போலீஸ் கஸ்டடி இன்றுடன் நிறைவு!

பெங்களூரு: போதை பொருள் வழக்கில் கைதான நடிகை சஞ்சனா, ராகினி ஆகியோரின் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், அதை நீட்டிக்க சிசிபி அலுவலர்கள் தரப்பில் முறையிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

கரோனா‌ தனிமை மையத்திலிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த ஊழியர்!

தானே: கரோனா தனிமை மையத்தில் உறவினரை கவனித்துக்கொள்ள வந்த பெண்ணை, தனிமை மையத்தின் ஊழியர் மிரட்டி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா ஆளுநரை நேரில் சந்தித்த கங்கனா ரணாவத்!

நடிகை கங்கனா ரணாவத், நேற்றுமகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை ராஜ் பவனில் சந்தித்துப் பேசினர்.

மகா கலைஞன் நாசரின் வெறித்தனமான ஃபோட்டோ சூட்!

நல்ல கலைஞன்... நல்ல கலைஞன்

இன்றுடன் முடிவுக்கு வந்த ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தடை!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு பிசிசிஐயால் விதிக்கப்பட்ட தடை இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் அமெரிக்கா: சீனா குற்றச்சாட்டுபெய்ஜிங்: சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என சீன பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details