தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 9, 2020, 11:15 AM IST

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

ஈ டிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்...

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM
11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

8 காவல் துறையினரை படுகொலை செய்த விகாஸ் துபே கைது! சிசிடிவி பதிவுகள்...

உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்): உத்திரப் பிரதேச மாநிலத்தின் உள்ளூர் ரவுடி கும்பலின் தலைவனான விகாஸ் துபே மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விகாஸ் துபே கூட்டாளிகள் நான்கு பேர் கைது: 14 துப்பாக்கிகள் பறிமுதல்!

பரிதாபாத்: விகாஸ் துபேவின் கூட்டாளிகள் நான்கு பேரை மத்தியப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சாத்தான்குளம் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது!

தூத்துக்குடி: சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் ஐந்து காவலர்களில் மூவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்வழியில் படித்தவர்களுக்கே அரசுப் பணி! பழ.நெடுமாறன் வலியுறுத்தல்...!

அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மத்திய அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அஸ்ஸாமிய மொழியை கட்டாயப் பாடமாக்கும் திட்டத்தை அஸ்ஸாம் அமைச்சரவை அறிவித்துள்ளது. அதேபோல் தமிழ் மொழிக்கு மாநிலத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பழ. நெடுமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

'வாழ்வாதாரம் இழந்த யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்ற தீர்மானம் வரவேற்கத்தக்கது'

டெல்லி: கரோனா பரவலால் வாழ்வாதாரம் இழந்த யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதை உறுதிப்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றிய தீர்மானம் வரவேற்கத்தக்கது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கேரளாவில் 301 பேருக்கு கரோனா பாதிப்பு: 169 ஹாட் ஸ்பாட் பகுதிகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக 301 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

21 நாடுகளைச் சேர்ந்த 91 தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு டெல்லி நீதிமன்றம் பிணை!

டெல்லி: 21 நாடுகளைச் சேர்ந்த தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் 91 பேருக்கு டெல்லி நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது.

நாட்டுப் புறக்கலைஞர் முகமது நிசார் மரணத்தில் சந்தேகம்?

ஹைதராபாத்: தெலங்கானா நாட்டுப்புறக் கலைஞரும் பாடகருமான முகமது நிசார், கரோனா பாதிப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கன்னட தொலைக்காட்சி நடிகர் தற்கொலை

மாண்டியா: கன்னட தொலைக்காட்சி நடிகர் சுஷில் கவுடா தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 36.

கரோனா வைரஸ்: விமர்சனங்களை விளாசிய ஜோகோவிச்

ஏட்ரியா கண்காட்சி டென்னிஸ் தொடரால் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமானது என்ற விமர்சனத்திற்கு செர்பிய நட்சத்திர டென்னிஸ் வீரர் ஜோகோவிச் பதிலடி கொடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details