தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am

By

Published : Nov 9, 2021, 11:02 AM IST

1. தமிழ்நாட்டுக்கு ரெட் அலர்ட்..!

தமிழ்நாட்டில் அடுத்த இரு தினங்களுக்கு (நவ. 10,11) சிவப்பு எச்சரிக்கை (Red Alert) வழங்கப்பட்டுள்ளது.

2. அம்பானி வீட்டுக்கு கையில் பையுடன் வந்த இருவர்; பாதுகாப்பு அதிகரிப்பு

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா என்ற சொகுசு குடியிருப்புக்கு அருகே இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பையுடன் நடமாடியதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

3. அதிகம் மழைபெய்தால் மதகுகளை திறந்துதான் ஆக வேண்டும் - செம்பரம்பாக்கத்தில் துரைமுருகன்

மழை அதிகமாகப் பெய்தால் ஏரியின் அனைத்து மதகுகளையும் திறந்துதான் ஆக வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வுக்குப்பின்னர் தெரிவித்தார்.

4. முல்லைப் பெரியாறு அணை: ஓபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு நீர்வள ஆதராத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

5. கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது - ககன் தீப்சிங் பேடி

வரும் 10, 11 ஆகிய தேதிகளில் பெய்யவுள்ள கனமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

6. புல்லூர் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரிப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழ்நாடு-ஆந்திரா எல்லையிலுள்ள புல்லூர் தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7. செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பு - கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலடி

அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதனால் ஏற்பட்ட பாதிப்புகளை சென்னை மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாடு மக்கள் முழுவதும் இன்னும் மறக்கவில்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பதிலடி கொடுத்துள்ளார்.

8. கொடிவேரி அணையில் வெளியேறும் உபரி நீர் - கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொடிவேரி அணையில் வழியாக அதிக அளவு உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருதல் அப்பகுதி மக்களுக்கு பொதுப்பணித் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

9. கொடைக்கானலில் கனமழை - உயிரை பணயம் வைத்து வெள்ளத்தை கடக்கும் கிராம மக்கள்

கொடைக்கானல் அருகேயுள்ள பள்ளங்கி கோம்பை பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தை அப்பகுதி மக்கள் உயிரைப் பணயம் வைத்துக் கடந்து வருகின்றனர்.

10. பத்ம விருது வாங்கிய பிரபலங்கள் - புகைப்படங்கள் இதோ!

பத்ம விருது நிகழ்ச்சிக்கு வந்தவர்களுடன் உரையாடும் பிரதமர் மோடி

ABOUT THE AUTHOR

...view details