தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am

By

Published : Nov 8, 2021, 11:04 AM IST

1. அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் உறுதி - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்திடத் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்வதாகவும், மீட்புப் பணிகள், நிவாரணப் பணிகளுக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

2. சக வீரர்களை சரமாரியாக சுட்ட சிஆர்பிஎஃப் வீரர் - 4 பேர் உயிரிழந்த பரிதாபம்!

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் துணை ராணுவப் படை முகாமில், சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் சக வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3. 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்டும் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

4. தமிழ்நாட்டில் மழையின் காரணமாக 4 பேர் உயிரிழப்பு - அமைச்சர் ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் மழையின் காரணமாக 4 பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், 260 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

5. தொடர் மழை: பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12 மாவட்டங்களுக்குக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுமுறை அளித்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

6. சாலையில் உள்ள பள்ளங்கள் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் - முதலமைச்சர்

சாலைகளில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் சார்பில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களைச் சுற்றித் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

7. விவசாயிகளை ஏமாற்றிய அதிமுக - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளை ஏமாற்றுவதற்காக மும்முனை மின்சாரம் எனப் பொய்யான வாக்குறுதிகளைக் அதிமுக கொடுத்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

8. கீழடி அகழாய்வு தளத்தில் தற்காலிக தொல்பொருள் கண்காட்சியகம்

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும், அகழாய்வுத் தளம் அருகே தற்காலிக தொல்பொருள் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

9. முதியவரை காப்பாற்ற சென்று ஆற்றில் சிக்கிய இளைஞர் - பத்திரமாக மீட்ட காவல்துறையினர்

சென்னை ஓட்டேரியில் பாலத்திலிருந்து கால்வாயில் விழுந்த முதியவரைக் காப்பாற்றச் சென்ற இளைஞர் கால்வாயில் சிக்கிக்கொண்டார்.
10. தெகிடி நாயகனுக்கு பிறந்தநாள்!

நடிகர் அசோக் செல்வன் இன்று தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் இவரது ரசிகர்களும்,திரைப்பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details