தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am

By

Published : Nov 2, 2021, 10:59 AM IST

1. தென் மாவட்டத்தினருக்கு தென்னக ரயில்வேயின் தீபாவளி பரிசு!

தீபாவளி பண்டிகைக்குத் தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் தடையின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மூன்று சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாகத் தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.

2. கனமழை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாகத் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

3. நீட் தேர்வு: நாமக்கல் மாணவர்கள் மாநில அளவில் முதலிடம்; தேசிய அளவிலும் சாதனை

நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இருவர், நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனர். முதலிடம் பிடித்த மாணவி கீதாஞ்சலி அகில இந்திய அளவில் 23ஆவது இடத்தையும், மாணவன் பிரவீன் 30ஆவது இடத்தையும் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

4. 'சமுதாயத்திற்கு பயன்படும் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்' - அண்ணா பல்கலை துணைவேந்தர்

அண்ணா பல்கலைக் கழகத்தில் சமுதாயத்திற்குப் பயன்படும் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது எனத் துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார்.

5. பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு - நாளை ஒத்திவைப்பு

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், தெளிவான வழக்கு நகல்களை வழங்க வேண்டும் என டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் கூறியதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு (நவ.02) ஒத்திவைக்கப்பட்டது.

6. கோடநாடு கொலை வழக்கு - தனபாலை கூடுதலாக 5 நாள்கள் விசாரிக்க அனுமதி

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் தனபாலை கூடுதலாக 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

7. 'கியூட்டி தி பியூட்டி' பார்வையால் கிறங்கடிக்கும் பிரக்யா நாக்ரா!

கண்கவரும் அல்லி மொட்டு பிரக்யா நாக்ரா

8. ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி - அரசாணை வெளியீடு

கூட்டுறவு வங்கிகளில் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அmரசாணை வெளியிட்டுள்ளது.

9. பணமோசடி: முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது

100 கோடி ரூபாய் பணமோசடியில் ஈடுபட்டதாக மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

10. பவன் கல்யாணை வைத்து படம் இயக்கும் எண்ணம் இருந்தது - இயக்குநர் ராஜமெளலி

ஆரம்ப காலங்களில், பவன் கல்யாணுக்கு ஒரு கதையை உருவாக்க முடிந்த அனைத்தையும் முயற்சித்தேன். அவரை வைத்து படம் ஒன்றை இயக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details