தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - காலை 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-amtop-10-news-at-11-am

By

Published : Oct 28, 2021, 11:04 AM IST

1. போக்குவரத்து துறையில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன - ராஜகண்ணப்பன்

போக்குவரத்து துறையில் விரைவில் ஆறு ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன எனவும், புதிதாக 2,210 பேருந்துகளும் 500 எலக்ட்ரிக் பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

2. இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 சோதனை வெற்றி

ஐந்தாயிரம் கி.மீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-5 ஏவுகணை, வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.

3. பெட்ரோல் விலை ஏற்றத்தால் அவதிக்குள்ளாகும் மக்கள்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 105 ரூபாய் 13 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.

4. நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த முஸ்லிமல்லாத ஒரே தலைவர் பெரியார் - ரியாஸ் அகமது புகழாரம்

நபிகள் நாயகத்திற்கு விழா எடுத்த முஸ்லிமல்லாத ஒரே இந்தியத் தலைவர் பெரியார் தான் என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பகுத்தறிவு கருத்தரங்கில் இணை ஆசிரியர் ரியாஸ் அகமது பேசியுள்ளார்.

5. மும்பையில் பேருந்து விபத்து: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

ஐந்து பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். தற்போது இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
6. பாஜக கொடி கம்பம் வைக்க அனுமதி கோரி மனு - தேனி ஆட்சியர் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொடி கம்பம் வைக்க அனுமதிக்கக் கோரிய மனுவை தேனி மாவட்ட ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

7. மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் பகுத்தறிவு கருத்தரங்கம்; இந்து முன்னணியினர் எதிர்ப்பு!

மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் உள்ளே நடைபெற்ற பகுத்தறிவு சொற்பொழிவு நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்க கோரி, இந்து முன்னணியினர் அமைப்பினர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

8. மாநகரம் ஸ்ரீக்கு இன்று பிறந்தநாள்

நடிகர் ஸ்ரீ தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

9. காற்று வெளியிடைக் கண்ணம்மா அதிதி ராவ்வுக்கு இன்று பிறந்தநாள்!

நடிகை அதிதி ராவ் தனது 35ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள், திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

10. EXCLUSIVE: ’சீக்ரெட் ட்ரெஷர்’ ஸ்ருஷ்டி டாங்கே புகைப்படத் தொகுப்பு

ஸ்ருஷ்டி டாங்கே புகைப்படத் தொகுப்பு

ABOUT THE AUTHOR

...view details