தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am

By

Published : Oct 27, 2021, 11:15 AM IST

1. ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ - கி.வீரமணி குற்றச்சாட்டு

இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்விக் கொள்கையைப் பரப்புவதாகவே இருக்கிறது எனவும், தமிழ்நாடு அரசு இதில் எச்சரிக்கையாக இருந்து, எந்த வகையிலும் இதனை அனுமதிக்கவே கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

2. காணாமல் போக ஓடை என்ன மளிகைப் பொருளா? - அமைச்சர் சேகர் பாபு

காணாமல் போவதற்கு திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான ஓடை நிலம் மளிகைப் பொருளல்ல என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

3. புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வலியுறுத்தல் - அமைச்சர் சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படவுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

4. நவம்பர் 15 முதல் வேலைநிறுத்தம்- கண்டெய்னர் வாடகையை உயர்த்த அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அனைத்து துறைமுக டிரெய்லர் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் தொடர்ந்து டீசல் விலை ஏற்றத்தாலும், கடந்த 8 வருடங்களாக வாடகை ஏற்றாமல் இருப்பதாலும் லாரி வாடகையை உயர்த்தி தர வேண்டும் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

5. நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று வழங்கல் - அமைச்சர் மெய்யநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

6. சொத்துக்குவிப்பு வழக்கு: எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 11 மணி நேரம் விசாரணை!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம், 11 மணி நேர தீவிர விசாரணையில் லஞ்சஒழிப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

7. தமிழ்நாட்டு ரயில்களில் முன்பதிவில்லா பொது பெட்டிகள் இணைப்பு - எம்.பி சு வெங்கடேசன் கோரிக்கை!

முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளை தமிழ்நாட்டுக்குள் ஓடும் விரைவு ரயில்களிலும் இணைக்க வேண்டும் என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

8. மனைவி பணியாற்றும் மருத்துவமனையில் உயிரிழந்த கணவர்; மருத்துவர்களின் அலட்சியத்தால் நடந்த அவலம்

நெல்லையில் மனைவி உள்பட ஐந்து உறவினர்கள் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கால்நடை மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். பிற மருத்துவர்கள் காட்டிய அலட்சியத்தால் உயிரிழப்பு நேர்ந்ததாக உறவினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

9. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்- 979 நபர்களிடம் விசாரணை

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து இதுவரை 979 நபர்களிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது.

10. 'ரஜினிகாந்தை வாழ்த்துவோம், தமிழ்நாட்டில் மேலும் கலைஞர்கள் திகழ்கிறார்கள் என்பதையும் காட்டுவோம்'- வைரமுத்து ட்வீட்

தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிகாந்திற்கு, கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதேநேரம், “பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம்” எனவும் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details