தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கத்தைக் காணலாம்.

top-10-news-at-11-am
top-10-news-at-11-am

By

Published : Oct 16, 2021, 11:01 AM IST

1. போட்றா வெடிய... ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்ற ராஜஸ்தான் முதலமைச்சர்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கடிதத்திற்கு இணங்க, ராஜஸ்தான் மாநிலத்தில் வெடி வெடிப்பதற்கான தடையை நீக்கி அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

2. சங்கர் ஜிவால் பணிகளைக் கவனிக்கும் சைலேந்திரபாபு

சென்னை காவல் ஆணையர் பணிகளை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு நேரடியாக கவனித்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

3. கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குப்பன்துறை கீழ்பவானி பாசன வாய்க்காலில் குளிக்கச் சென்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

4. ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

சென்னை ராயப்பேட்டை அருகே ஓடும் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் இரண்டு பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

5. 'நிலக்கரி மாயமான விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை'

அனல் மின் நிலையங்களில் நிலக்கரி மாயமான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

6. தூத்துக்குடியில் ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி?

தூத்துக்குடியில் 35 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது எப்படி என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

7. தமிழர் அறத்தோடு சீமான் நடந்துகொள்ள வேண்டும் - இயக்குநர் கௌதமன்

தமிழர் அறத்தோடு சீமான் நடந்துகொள்ள வேண்டும். நாம் தமிழர் கட்சியினர் பேச்சு தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறது எனத் திரைப்பட இயக்குநர் கௌதமன் தெரிவித்துள்ளார்.

8. பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்கவும் - அமைச்சர் வேண்டுகோள்

பண்டிகைகளின்போது பொதுமக்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

9. கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு: தலைவர் பிரச்சினைத் தீருமா?

நீண்ட நாள் தேவையாக உள்ள தலைவர் பதவி குறித்து காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இடைக்காலத் தலைவர் சோனிய காந்தி மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.

10. HBD அனிருத் ரவிச்சந்தர்

திரைப்பட இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகருமான அனிருத் ரவிச்சந்திரன் இன்று தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details