தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 11am - TOP 10 NEWS

ஈடிவி பாரத்தின் முற்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11am
11am

By

Published : Jun 21, 2021, 11:09 AM IST

1.புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் கரோனா பரவலைத் தடுக்க தற்போது உள்ள ஊரடங்கை மேலும் சில தளர்வுகளோடு ஜூன் 28ஆம் தேதிவரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

2.ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை தொடக்கம்

புதிய தளர்வுகளின்படி சென்னை உள்பட 4 மாவட்டங்களில் ஒரு மாதத்திற்குப் பின்னர் பேருந்து சேவை இன்று தொடங்கியது.

3.வீடு தேடிவந்த தமிழிசை: பரிசு கொடுத்த ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

4.இன்று கூடுகிறது 16ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்

தமிழ்நாடு 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது.

5.தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை

சென்னை: பொது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று(ஜுன்.21) முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.

6.'மனிதக் கழிவுகளை அகற்ற இயந்திரம்' - தலை நிமிரவைத்த உதயநிதியின் செயல்

மனிதக் கழிவுகளை இயந்திரத்தைக் கொண்டு அகற்றும் முறையை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயதிதி ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

7.இந்தியாவில் 3 கோடியை நெருங்கும் கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,422 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8.எங்கும், எதிலும் இனித்து ஒலிக்கும் இசையின் தினம் இன்று!

உலக இசை தினம் இன்று (ஜுன்.21) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, இசைத்துறையில் சாதனைப்படைத்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் உள்ள இசைக் கலைஞர்களுக்கு #WorldMusicDay என்ற ஹேஷ்டேக் மூலம் அனைவரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

9.'ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் யோகா' - சர்வதேச யோகா தினம்

இன்று 7ஆவது சர்வேதச யோகா தினம் 'ஆரோக்கியத்திற்கான யோகா' எனும் கருப்பொருளில் கொண்டாடப்படுகிறது.

10.மைதானத்தில் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்

சென்னை: அஜித்தின் ரசிகர்கள் சிலர் கிரிக்கெட் மைதானத்தில் அஸ்வினிடம் வலிமை அப்டேட் கேட்ட காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details