தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 11am - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் முற்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11am
11am

By

Published : Jun 14, 2021, 11:36 AM IST

1.தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் எம்.பியான ஏ.கே.எஸ்.விஜயன் திமுக விவசாய அணியின் செயலாளராக உள்ளார்.

2.ஆபாச பேச்சால் லட்சங்களை அள்ளிய மதன்... வெளிவருமா 18+ சேனலின் லீலைகள்?

Gamer மதன், ஆதரவற்றோருக்குப் பணம் வசூலிப்பதாகக் கூறி, மோசடி செயலில் ஈடுபடுவதாக எழுந்த புகாரையடுத்து, அவரை நேரில் ஆஜராகப் புளியந்தோப்பு சைபர் பிரிவு காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

3.பல மாநிலங்களில் தீவிரமடையும் தென்மேற்குப் பருவமழை

ஜுன் 3 முதல் தொடங்கிய தென்மேற்குப் பருவமழை, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிர மழைப்பொழிவைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 பார்சல் மட்டுமே அனுமதி: வெறிச்சோடியே டீ கடைகள்!

ஊரடங்கு உத்தரவு தளர்வினைத் தொடர்ந்து இன்று (ஜூன் 14) காலை முதலே தேநீர்க் கடைகள் திறக்கப்பட்டன. பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்பதால் தேநீர்க் கடைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

5. 'N95க்கு இணையான மூலிகை முககவசம்' - பொறியியல் மாணவர் கண்டுபிடிப்பு

முக கவசம் உயிர் கவசம். ஆனால், ஒரு எல்லைக்கு மேல் முக கவசம் அணிந்தால் மூச்சு மூட்டுகிறது. மூச்சு மூட்டுகிறது என்று முக கவசத்தை கழட்டினால் மூச்சடைத்து இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு முடிவு கண்டுள்ளார், கல்லூரி மாணவர் சஜித்.

6. 'எதிர்க்கட்சித் தலைவராக கேள்வி எழுப்பிய உங்கள் மனச்சான்றை உலுக்கவில்லையா?' - சீமான்

கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை பரவல் உச்சத்திலிருக்கும் கொடுஞ்சூழலில் மதுபானக்கடைகளைத் திறந்து வைத்து மக்கள் உயிரோடு விளையாடுவதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

7. 'கர்நாடகாவில் ஆரஞ்சு அலர்ட்'

ஜூன் 17 ஆம் தேதி வரை கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

8 மது அருந்த சென்ற தாய் - பசியால் குழந்தைகள் இறந்த சோகம்

ரஷ்யாவில் மதுவிருந்துக்குச் செல்லும் மோகத்தில், இரண்டு குழந்தைகளை நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே தாயார் அடைத்து வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9. 72 நாள்களுக்கு பிறகு 70ஆயிரமாகக் குறைந்த கரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 921 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

10. வாவ் சிம்புவா இது! ஆச்சரியத்தில் ரசிகர்கள்

நடிகர் சிம்பு உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details