தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

11am
11am

By

Published : May 9, 2021, 11:09 AM IST

1.சபாநாயகராகிறாரா அப்பாவு - அரசியல் பின்னணி?

தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்புக்கு அப்பாவு நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

2.'கர்ப்பிணிகளை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும்' - டிடிவி தினகரன்!

சென்னை: கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

3.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில், முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (மே.9) நடைபெறவுள்ளது.

4.அமலுக்கு வரும் முழு ஊரடங்கு: டாஸ்மாக் கடையில் குவிந்த மது பிரியர்கள்!

திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், ஆம்பூர் பகுதியிலுள்ள மதுபான கடைகளில் மது பிரியர்கள் குவிந்தனர்.

5.'ஸ்டாலின் தாத்தாவுக்கு என்னோட கரோனா நிதி' - தனது சேமிப்பை அனுப்பிய சிறுவன்!

கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படும் மக்களை காப்பாற்ற வலியுறுத்தி தனது சேமிப்பு பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த மதுரையை சேர்ந்த சிறுவன் பொது மக்களின் பாராட்டை பெற்றுள்ளான்.

6.ஊரடங்கு எதிரொலி :டாஸ்மாக் கடையில் அலைமோதும் கூட்டம்

கரோனா பரவல் காரணமாக மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது. டாஸ்மாக் கடையில் மதுபிரியர்கள் கூட்டம் அலைமோதியது.

7.அரசின் தலைமை வழக்கறிஞராக ஆர். சண்முகசுந்தரம் நியமனம்!

மூத்த வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

8.ஒரே நாளில் 4 லட்சம் பேர் பாதிப்பு; 4,092 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நேற்று (மே.8) ஒரே நாளில் நான்கு லட்சத்து 3 ஆயிரத்து 738 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

9.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விக்ரம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினை, நடிகர் விக்ரம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

10.சில நேரங்களில் வாழ்க்கை உண்மையிலேயே நியாயமற்றது: சோனு சூட்

கரோனாவால் உயிரிழந்த பாரதி என்ற 25 வயதுடைய பெண்ணுக்கு பாலிவுட் நடிகரும் சமீபகாலங்களில் வறியோருக்கு உதவுபவருமான சோனு சூட் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details