தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-at-11top-10-news-at-11-am-am
top-10-news-at-11-am

By

Published : Apr 27, 2021, 11:04 AM IST

1. மழலைகளை மகிழ்விக்க வரும் ஈடிவி பால பாரத்...

ஈடிவி நிறுவனத்தின் ஒரு அங்கமாக தொடங்கப்படவுள்ள பால பாரத் தொலைக்காட்சி, மழலைகளை மகிழ்விக்க காத்துக் கொண்டிருக்கிறது.

2. இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் கரோனா உயிரிழப்பு

நாட்டில் ஒரே நாளில் மூன்று லட்சத்து 23 ஆயிரத்து 144 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3. இருமல் மருந்துகளை கரோனா பாதிப்பிற்கு உபயோகிக்காதீர்!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்கள் அனுமதியின்றி இருமல் மருந்து உள்ளிட்ட எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

4. 6 நிமிடத்திற்குள் 128 பிரபலங்களின் குரலைப் பேசி கோவை இளைஞர் சாதனை!

கோவை: ஆறு நிமிடத்திற்குள் திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சியினர், கார்டூன் கதாபாத்திரங்கள் என 128 பேரின் குரல்களைப் பேசி, இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

5. கரோனாவால் உயிரிழந்த தலைமைக் காவலர்!

கடலூர்: சிதம்பரம் நகர காவல் நிலைய தலைமைக் காவலர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6. ஆட்டோ ஓட்டுநரிடம் நகை மோசடி: இருபெண்கள் கைது

சென்னை: கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற உதவி செய்து தருமாறு கூறி ஆட்டோ ஓட்டுநரிடம் நகை மோசடியில் ஈடுபட்ட 17 வயது சிறுமி உள்பட இரு பெண்களைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

7. கூடுதலாக தடுப்பூசிகள் வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டிற்குக் கூடுதலாகத் தடுப்பூசிகளை வழங்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

8. கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு தலாய் லாமா பங்களிப்பு!

கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையுடன் இந்தியா போராடிவரும் நிலையில், திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா பிஎம்-கேர்ஸ் நிதிக்கு பங்களிப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார்.

9. கரோனா பீதியில் பெங்களூருவைவிட்டு வெளியேறும் மக்கள்

பெங்களூருவில் 14 நாள்கள் ஊரடங்கு விதிக்கப்பட்ட காரணத்தினால் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.


10. இயக்குநர் தாமிரா காலமானார்

சென்னை: இயக்குநர் தாமிரா கரோனா தொற்று காரணமாக இன்று (ஏப்ரல் 27) காலமானார்.

ABOUT THE AUTHOR

...view details