தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am - Top 10 news @ 11am

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

TOP 10 NEWS @ 11 AM
TOP 10 NEWS @ 11 AM

By

Published : Apr 26, 2021, 10:53 AM IST

1.ஆஸ்கர் 2021: விருதுகள் அறிவிப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 93ஆவது ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2.நாட்டில் 3.5 லட்சத்தைக் கடந்த ஒருநாள் கரோனா பாதிப்பு

நாட்டில் உச்சபட்சமாக நேற்று ஒரேநாளில் மூன்று லட்சத்து 52 ஆயிரத்து 991 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3.மூவர்ணத்தில் ஒளிர்ந்த பிரமாண்டமான புர்ஜ் கலிஃபா

கோவிட்-19 உடனான போராட்டத்தில் இந்தியாவுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தும்விதமாக ஐக்கிய அரபு அமீரகம் உலகின் மிக உயர்ந்த கட்டடமான அபுதாபியில் உள்ள புர்ஜ் கலிஃபாவை மூவர்ணத்தில் ஒளிரவைத்துள்ளது.

4.அஜித் தோவல் தலையீடு: தடுப்பூசி கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா

தடுப்பூசி தயாரிக்கும் மூலப்பொருள்களை இந்தியாவுக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது.


5.சாலையில் திடீரென ஏற்பட்ட குழியில் சிக்கிய லாரி!

சாலையில் திடீரென ஏற்பட்ட மூன்று அடி குழியினுள் லாரி ஒன்று சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6.பருத்தி சாகுபடிக்கு உர மானியம் வழங்க உழவர்கள் கோரிக்கை

இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாத பருத்தி சாகுபடி உரத்திற்கான மானியம் மத்திய அரசின் உர விலை ஏற்றத்தால் இந்தாண்டு வழங்க வேண்டுமென உழவர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

7.கள்ளழகர் எழுந்தருளல்: கோயில் வளாகத்திலேயே உருவாக்கப்பட்ட தத்ரூப செட்டிங்ஸ்

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்வு கோயில் வளாகத்திலேயே நடைபெற இருப்பதால் அங்கு தத்ரூபமாக செட்டிங்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

8.சென்னை விமான நிலைய உள்நாட்டு விமான பயணிகளுக்குப் புதிய கட்டுப்பாடு

உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் விமான பயணிகளுக்கு கரோனா மருத்துவச் சான்றிதழ் (நெகட்டிவ்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

9.சென்னையில் ஊரடங்கை மீறிய 673 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 673 வாகனங்களை காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


10.ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய அஸ்வின்!

கரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடிவரும் நிலையில், ஐபிஎல் தொடரிலிருந்து தான் விலகுவதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details