தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - காலை 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-at-11-am
top-10-news-at-11-am

By

Published : Apr 22, 2021, 11:20 AM IST

சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கரோனாவால் உயிரிழப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி கரோனா பாதிப்பால் உயிரிழந்தார்

பிச்சை எடுங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கடுப்பான நீதிமன்றம்

தேசிய தலைநகர் டெல்லியில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தொழிற்துறைகளுக்கு ஆக்சிஜன் விநியோகிப்பதை மத்திய அரசு நிறுத்தவேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளது - காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார்

நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் இருப்பதாக அதனை ஆய்வு செய்த காங்கிரஸ் எம்பி ஜெயக்குமார் கூறினார்.

தலைமைச் செயலகத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்

தலைமைச் செயலக ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.


ஆதரவற்ற மக்களுக்காக தொடங்கப்பட்ட "காவல் கரங்கள்"

தன்னார்வலர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை அடங்கிய கூகுள் தளத்தில் ஆதரவற்றோர் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் 2,104 பேர் பலி - இந்தியாவை மிரட்டும் கரோனா

இதுவரை இல்லாத வகையில் நாட்டில் ஒரே நாளில் மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 835 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சித்திரைத் திருவிழா ஏழாம் நாளில் அம்மனுடன் சுவாமி பவானி

மதுரை சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளில் மீனாட்சி அம்மன் யாளி வாகனத்திலும், அம்மனுடன் சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும் ஆடிவீதியில் பவனி வந்து அருள்பாலித்தனர்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: 8 பேர் படுகாயம்

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

'பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு' கவிஞர் வைரமுத்து

பூஜ்ஜியம் என்பது சாதாரண இலக்கம் அல்ல, பூஜ்ஜியத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது, பூஜ்ஜியத்தை கண்டுபிடித்த பெருமை இந்தியாவிற்கு உண்டு என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.


அஜித்தை வீடியோ எடுத்த பெண் தற்கொலை முயற்சி

அஜித்தை வீடியோ எடுத்த பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details