தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM - காலை 11 மணி செய்திச் சுருக்கம்

காலை 11 மணி செய்திச் சுருக்கம்...

காலை 11 மணி செய்திச் சுருக்கம்  TOP 10 NEWS @ 11 AM
காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

By

Published : Apr 7, 2021, 10:57 AM IST

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாகக் கலந்துரையாடுகிறார்.

கோவையில் பாதுகாப்பு அறையைப் பார்வையிட்ட கமல்

கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கமல் ஹாசன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பாதுகாப்பு அறைக்குச் சென்று பார்வையிட்டார்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் திடீரென நுழைந்த லாரிகள் - திமுகவினர் முற்றுகை

தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு 5 லாரிகளில் பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

’சர்கார்’ பாணியில் வாக்களித்த வங்கி ஊழியர்!

கள்ள ஓட்டால் வாக்களிக்கும் உரிமையிழந்த வங்கி ஊழியர் ’சர்கார்’ திரைப்பட பாணியில் 49P என்ற அடிப்படையில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பயங்கரவாதிகள் பதுங்கல்: ஸ்ரீநகரின் புறநகரில் தீவிர தேடுதல் வேட்டை!

நகரின் புறநகரில் உள்ள குல்பாக் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை அறிந்த பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

'தளபதி 65': ஜார்ஜியாவுக்குப் பறந்த விஜய்!

'தளபதி 65' படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்றுள்ளார். முன்னதாக விமான நிலையத்தில் விஜய் முகக்கவசம் அணிந்தபடி சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பார்த்திபனுக்கு திடீர் ஒவ்வாமை!

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இயக்குநரும் நடிகருமான பார்த்திபனுக்கு திடீரென ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. இதனை அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக வெங்கட் பிரபு வெளியிட்ட 'வலி'மை அப்டேட்!

பிரதமர் மோடி முதல் மொய்ன் அலி வரை வலிமை அப்டேட்டை கேட்டு தல அஜித் ரசிகர்கள் ஒருபுறம் சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு வலிமை அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பதிவானதைவிட கூடுதலாக 50 வாக்குகள் - நள்ளிரவில் நாதக போராட்டம்

பதிவான வாக்குகளை விட 50 வாக்குகள் கூடுதலாக கணக்கு காண்பிக்கப்பட்டதற்கு முறையாக விளக்கம் அளிக்காத தேர்தல் அலுவலர்களை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் நள்ளிரவில் போராட்டம் நடத்தினர்.

உடன்பிறப்புகளே இனிதான் விழிப்புடன் இருக்க வேண்டும்! - ஸ்டாலின் அறிவுறுத்தல்

வாக்குப்பதிவு எண்ணும் நாளான மே 2 வரை திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details