தேர்தல் காரணமாக காவலர் உடற்தகுதி தேர்வு ஒத்திவைப்பு
காவலர்கள் சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளதால், காவலர் உடற்தகுதி தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
அமெரிக்கர்கள் மியான்மர் செல்ல வேண்டாம்- வெள்ளை மாளிகை
அமெரிக்கர்கள் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் செல்ல வேண்டாம் என வெள்ளை மாளிகையிலிருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், “மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சி, வன்முறை-கலவரம், கோவிட் பரவல்” உள்ளிட்வை காரணங்களாக கொடுக்கப்பட்டுள்ளன.
8 மணி நேர விசாரணைக்கு பின்னர் நடிகர் அஜிஸ் கான் கைது
போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் 8 மணி நேர விசாரணைக்கு பின்னர் நடிகர் அஜிஸ் கானை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஆபாச படங்களை பதிவேற்றியதாக புகார் உள்ளது.
அஸ்ஸாம் இரண்டாம் கட்டத் தேர்தல்: ஓர் பார்வை
அஸ்ஸாமில் நாளை (ஏப்ரல் 1) 39 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 37,34,537 ஆண் வாக்காளர்கள், 36,09,959 பெண் வாக்காளர்கள், 135 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 73,44,631 பேர் வாக்களிக்க உள்ளனர்.
அருப்புக்கோட்டையில் வாக்கு சேகரித்த விஜயகாந்த்