தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈடிவி பாரத் காலை 11 மணி செய்திச் சுருக்கம் - வருமானத்துக்கு அதிகமாக சொத்து

ஈடிவி பாரத் காலை 11 மணி செய்திச் சுருக்கம் இதோ..

Top 10 News @ 11 AM
Top 10 News @ 11 AM

By

Published : Mar 30, 2021, 11:10 AM IST

சென்னை: ஒரே நாளில் 5 கோடி ரூபாய் ஆவணமில்லா பணம் பறிமுதல்

சென்னை முழுவதும் நேற்று (மார்ச்.29) தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத் தணிக்கையில், உரிய ஆவணங்களற்ற பணம் ஐந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து: அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு 4 ஆண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்த வழக்கில், அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்துக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.33 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தாராபுரத்தில் எல். முருகன் உள்பட 13 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை!

தாராபுரத்தில் எல். முருகன் உள்பட 13 வேட்பாளர்களை ஆதரித்த பிரதமர் நரேந்திர மோடி இன்று பரப்புரை மேற்கொள்கிறார்.

பாகிஸ்தானில் ஹோலி கொண்டாடிய இந்துக்கள்!

பாகிஸ்தானில் வாழும் இந்துக்கள் ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். குறிப்பாக கராச்சி உள்ளிட்ட இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை களை கட்டியது.

நாகப்பட்டினம் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

கடந்த தேர்தல் வரையில் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டிருந்த நாகப்பட்டினத்திலிருந்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதால், தற்போது ஒரு மக்களவைத் தொகுதியையும், நாகப்பட்டினம், கீழ்வேளூர்(தனி), வேதாரண்யம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

டி-20 தொடருக்கு பின் இர்ஃபான் பதானுக்கு கரோனா பாதிப்பு

அண்மையில் நடைபெற்று முடிந்த சர்வதேச சாலை பாதுகாப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா லெஜெண்ட்ஸ் அணியில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், யுசுஃப் பதான், சுப்ரமணிய பத்ரிநாத் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது இர்ஃபான் பதானுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

' மத்திய அரசுடனான உறவு மாநில உரிமையை பாதுகாக்கவே...' - ஜெயக்குமார்

சென்னை: ”மாநில உரிமைகளைபாதுகாக்கதான் நாங்கள் மத்திய அரசடன் நல்லுறவைப் பேணி வருகிறோம்” என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

'இது ஆ.ராசா அளித்த வாய்ப்பு...எடப்பாடியாருக்கே தாய்மார்களின் வாக்கு' - ஏ.சி.சண்முகம்

ஈரோடு: தமிழ்நாட்டில் உள்ள தாய்மார்களின் வாக்குகள் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பை ஆ ராசா அளித்துள்ளார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தபால் ஓட்டு வழங்கும் பணி- மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை: 2021ஆம் ஆண்டு சட்டபேரவை பொதுத்தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார்.

உயிரை மாய்த்துக்கொண்ட பாஜக நிர்வாகி - காரணம் என்ன?

டெல்லி மேற்கு மாவட்டத்தின் முன்னாள் பாஜக தலைவர் குர்விந்தர் சிங் பாவா, தனது வீட்டின் அருகிலுள்ள பூங்காவில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்

ABOUT THE AUTHOR

...view details