தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 11AM - புனே பேஷன் தெருவில் தீ விபத்து

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் இதோ..

Top 10 news @ 11AM
Top 10 news @ 11AM

By

Published : Mar 27, 2021, 11:12 AM IST

’தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது’ - ஸ்டாலின்

ஈரோடு: தமிழ்நாட்டில் மோடி மஸ்தான் வேலை எடுபடாது என திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரையின்போது ஆவேசமாகப் பேசியுள்ளார்.

வெற்றிபெற்றால் 3 மாதத்திற்கு ஒருமுறை வருவேன் - விஜய பிரபாகரன்

நீலகிரி: தேர்தலில் வெற்றிபெற்றால் மூன்று மாதத்துக்கு ஒருமுறை நான் இந்தத் தொகுதிக்கு வந்து உங்கள் குறைகளைக் கேட்டு அறிவேன் என விஜயபிரபாகரன் வாக்குறுதி அளித்தார்.

ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சராக வரக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

தேர்தல் பரப்புரையின்போது, ஒருபோதும் ஸ்டாலின் முதலமைச்சராக வரக்கூடாது என்று தொண்டர்களைப் பார்த்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா பாதிப்பு!

சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புனே பேஷன் தெருவில் தீ விபத்து!

புனே பேஷன் தெருவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மிகப்பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டது.

மக்கள் திரண்டுவந்து வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை (மார்ச் 27) காலை தொடங்கிய நிலையில், மக்கள் வாக்களித்து தங்களின் உரிமையை பயன்படுத்த வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

சென்னை: போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடிசெய்த வழக்கில் போக்குவரத்துத் துறைமுன்னாள்அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 47 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

'தீயசக்தி திமுக இனி எந்தத் தேர்தலையும் சந்திக்க முடியாத அளவுக்கு படுதோல்வி அடையும்!'

விவசாயிகளுக்கான கூட்டுறவுச் சங்கக் கடன் தள்ளுபடி, விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கான சலுகைகள், மக்கள் நலத் திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகளோடு ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.

திருணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் குண்டுவெடிப்பு: மூவர் காயம்!

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் ஜாய்பூர் பகுதியில் உள்ள திருணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) வெள்ளிக்கிழமை நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் காயமடைந்தனர்.

ஜெஷோரேஷ்வரி, ஓரகண்டி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழிபாடு!

வங்க தேசத்தில் உள்ள ஜெஷோரேஷ்வரி, ஓரகண்டி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்துகிறார்.

ABOUT THE AUTHOR

...view details