தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am - tamilnadu latest news

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச்சுருக்கம்

top 10 news at 11 am
11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11am

By

Published : Mar 17, 2021, 11:15 AM IST

வேட்பாளரை மாற்றக்கோரி முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்!

ஆலங்குடி அதிமுக சட்டப்பேரவை வேட்பாளர் தர்ம தங்கவேலை மாற்றக் கோரி, முதலமைச்சர் வாகனம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சோர்ந்து போகாதீங்க.. தொண்டர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து அசத்திய எம்எல்ஏ!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ பன்னீர்செல்வம், கட்சித் தொண்டர்களுக்கு தேநீர் தயாரித்து பரிமாறினார்.

தண்ணீர் குடத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேட்சை வேட்பாளர்!

பாண்டியாறு-புன்னம்புழா நீர் மின் திட்டத்தை நிறைவேற்றக்கோரி சுயேட்சை வேட்பாளர் தண்ணீர் குடத்துடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இரண்டு ஐஏஎஸ் அலுவலர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - ஜமீன்தார்கள்போல் செயல்படுவதாக நீதிபதிகள் கருத்து

தனியார் சிமெண்ட் ஆலைக்கு 24.6 ஏக்கர் நீர்நிலையை குத்தகைக்கு ஒதுக்கிய விவகாரத்தில், இரண்டு ஐஏஎஸ் அலுவலர்களுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த வாட்ஸ்அப் உரையாடல் கசிந்ததா? உள்துறை அமைச்சகம் விளக்கம்

டிஆர்பி ஊழல் குறித்த விசாரணையின்போது, சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த உரையாடல் கசிந்ததாகக் கூறப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சகம் இதுகுறித்து விளக்கமளித்துள்ளது.

30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல்

தமிழ்நாடு - கேரள எல்லையான தென்காசி அருகே அரசுப்பேருந்தில் பயணித்த நபரிடமிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் 3.5 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்!

சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான கடைகளில் வருமான வரித்துறை அலுவலர்கள் நடத்திய சோதனையில் 3.5 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பழிக்குபழி நடந்த கொலை சம்பவம் - குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண்

அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் நடந்த கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள், கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

தனியார் நகைக் கடைக்கு சொந்தமான 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்!

வேளச்சேரி அருகே பறக்கும்படை அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையில் 3.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

காஞ்சிபுரம் அருகே ரூ.4.90 லட்சம் மதிப்புள்ள பட்டு புடவைகள் பறிமுதல்!

உரிய ஆவணங்கள் இன்றி இரண்டு கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.90 லட்சம் மதிப்பிலான 56 பட்டு புடவைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details