தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - Headlines

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 @ 11 AM
Top 10 @ 11 AM

By

Published : Jan 18, 2021, 11:00 AM IST

அகமதாபாத், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பூமி பூஜை: காணொலி வாயிலாக இணையும் பிரதமர் மோடி!

அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 18) பூமி பூஜை செய்து வைக்கிறார்.

இந்தூரில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் வைத்திருந்த தம்பதி கைது

மத்தியப் பிரதேசத்தில் 19,600 அமெரிக்க டாலர்களை(இந்திய மதிப்பில் 14 லட்சம்) வைத்திருந்த தம்பதியரை இந்தூர் சிறப்பு அதிரடிப் படையினர் (Special Task Force) கைது செய்தனர்.

நன்னிலம் அருகே 50 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் கண்ணீர்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பெய்த கனமழை காரணமாக, நன்னிலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

அக்காவை திருமணம் செய்தால் தங்கச்சி இலவசம்? திமுகவின் தேர்தல் அறிக்கையை கேலி செய்த அமைச்சர்

அக்காவை திருமணம் செய்தால் தங்கச்சி இலவசம் என்ற வாக்குறுதி திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேலி செய்துள்ளார்.

வாட்ஸ்-ஆப் குழுக்களில் குறைகளைப் பதிவேற்றினால் சைபர் கிரைம் நடவடிக்கை பாயும்!

அரசு கல்லூரிகள், மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் வாட்ஸ்-அப் குழுக்களில் குறைகளைப் பதிவேற்றம் செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது சைபர் கிரைம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்லூரி கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா ரத்து: தமிழ்நாடு பக்தர்கள் ஏமாற்றம்!

ராமநாதபுரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா கரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ரத்து செய்யப்படுவதாக இலங்கை யாழ் மாவட்ட குரு முதல்வர் ஜீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

ஹார்டுவேர்ஸ் கடையில் தீ விபத்து – ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசம்

ஹார்டுவேர்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 80 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின.

உ.பி.யில்., கடும் பனிமூட்டம் - அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து

கடும் பனி காரணமாக ஆக்ரா-லக்னோ அதிவேக நெடுஞ்சாலையில் ஐந்து வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்துக்களை குறிவைக்கிறதா 'தாண்டவ்' வெப் சீரிஸ் - விளக்கம் கேட்கிறது ஒளிப்பரப்புத் துறை அமைச்சகம்!

'தாண்டவ்' வெப் சீரிஸ், இந்து கடவுள்களை அவமதிப்பதாக எழுந்த புகார் தொடர்பாக விளக்கமளிக்குமாறு அமேசான் பிரைமிற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்பானீஷ் சூப்பர் கோப்பை: மெஸ்ஸிக்கு ரெட் கார்டு; பட்டத்தை வென்றது அத்லெடிக் பில்பாவோ!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அட்லடிக் பில்பாவோ அணி 3-2 என்ற கணக்கில் பார்சிலோனா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

ABOUT THE AUTHOR

...view details