தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 1 PM - Top news

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

மதியம் 1 மணி செய்தி சுருக்கம்
மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

By

Published : Nov 21, 2021, 1:39 PM IST

1. Heavy Rain Alert: 8 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Atmospheric overlay circulation) தமிழ்நாடு கடலோரப் பகுதி வரை நீடிப்பதன் காரணமாக, எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது (Heavy Rain Alert) என வானிலை ஆய்வு மையம் (Chennai RMC) தெரிவித்துள்ளது.

2. Trichy SSI Murder: ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்!

திருச்சியில் ஆடு திருடும் கும்பலால் கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

3. Karur college student suicide: கரூரில் பள்ளி மாணவியை அடுத்து கல்லூரி மாணவி தற்கொலை!

கரூரில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

4. Chennai Flood: சென்னையில் தீவாகக் காட்சியளிக்கும் கிராமம்; காரணம் என்ன?

பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் திருவொற்றியூரை அடுத்த சடையப்பன்குப்பம் போன்ற ஊர்களை நீர் சூழ்ந்து காணப்படுகிறது.
5. Mega Vaccination Camp: இன்று 10ஆவது மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாடு முழுவதும் இன்று 10ஆவது மெகா தடுப்பூசி முகாம் (Mega Vaccination Camp) 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.

6. ஆவணதாரர் பெயர் காட்சிப்படுத்த நடவடிக்கை - அரசாணை வெளியீடு

சார்பதிவாளர் அலுவலகங்களில் அடையாளவில்லை காட்சிக் கருவியில் (Token Display Unit) ஆவணதாரர் பெயரையும் காட்சிப்படுத்தும் முறையினை ரூ.3.40 கோடி செலவில் நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

7. அம்மா, கூட்டுறவு மருந்தகங்களில் ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம்; கூட்டுறவு சங்க பதிவாளர் பதில்!

அம்மா மருந்தகங்களை மூடவில்லை, மாறாக அவற்றுடன் கூட்டுறவு மருந்தகங்களையும் சேர்த்து இந்த ஆண்டு ரூ.93.09 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது என கூட்டுறவு சங்க பதிவாளர் தெரிவித்துள்ளார்.

8. கைதி முன் விடுதலை உரிமை அல்ல - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பாக, அரசு விரைவில் சிறை விதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

9. 75 Years of Independence: ஆங்கிலேயர்களை நிலைகுலையச் செய்த மாவீரன் உத்தம் சிங்!

நாட்டின் பெருமகன் உத்தம் சிங் 1940ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள பென்டன்வில் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
10.#18yearsofiyarkai காதல் திரைப்படங்களில் “இயற்கை”க்கு என்றுமே தனியிடம்!

இயற்கை படம் வெளியாகி இன்றோடு (21.11.2021) 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இப்படம் இன்றும் பேசப்பட்டு வரும் காரணம் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

ABOUT THE AUTHOR

...view details