தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

By

Published : Nov 4, 2021, 1:30 PM IST

1. நரிக்குறவர், இருளர் மக்களுக்கு முதலமைச்சரின் தீபாவளி பரிசு!

செங்கல்ப்பட்டு மாவட்டத்தில் நரிக்குறவர், இருளர் சமூக மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

2. 'அண்ணாத்த' கொண்டாட்டம்: ரசிகர்களுடன் கண்டுகளித்த தனுஷ், குஷ்பு!

அண்ணாத்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நடிகை குஷ்பு, நடிகர் தனுஷ் ஆகியோர் திரையரங்கு சென்று ரசிகர்களுடன் அதிகாலை காட்சியை கண்டுகளித்துள்ளனர்.

3. தலை தீபாவளி கொண்டாட இருந்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்...

திருநெல்வேலியில் தலை தீபாவளி கொண்டாட இருந்த இளம் பெண் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

4. அரசு அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: சிக்கியது ரூ. 2.28 கோடி!

வேலூர் மண்டல தொழில் நுட்பக் கல்வி செயற்பொறியாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் இரண்டு கோடியே 28 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

5. எஸ்டிபிஐ கட்சி நிர்வாகி மீது வழக்குப்பதிவு

முக கவசம் அணியாததற்கு அபராதம் கேட்ட காவல்துறையினரை மிரட்டிய எஸ்டிபிஐ கட்சி பிரமுகர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

5. பிளாஸ்டிக் கழிவு கொடுப்பவர்களுக்கு “அண்ணாத்த” சிறப்பு காட்சி டிக்கெட் இலவசம்

திருப்பத்தூர் அருகே ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்தால் அண்ணாத்த திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்பட்டது.

7. 34,500 மாணவர்களுக்கு பள்ளிக்கட்டணம் - நிஷிதா ராஜ்புத்திற்கு குவியும் பாராட்டு

கடந்த பத்தாண்டுகளில் 34ஆயிரத்து 500 மகள்களின் பள்ளிக் கட்டணமாக 3.80 கோடி ரூபாய் செலுத்தி உதவிய சமூக ஆர்வலர் நிஷிதா ராஜ்புத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன.

8. தீபாவளி - தயார் நிலையில் தீயணைப்பு துறை.

தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் தீ விபத்துகளை தடுக்கும் விதமாக 351 தீயணைப்பு நிலையங்கள் மற்றும் மூன்று மீட்பு நிலையங்கள் தயார் நிலையில் உள்ளன.

9. வெளியானது மனி ஹெய்ஸ்ட் கடைசி பாகத்தின் ட்ரைலர்

மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ்-ன் கடைசி பாகத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

10. விஜய் சேதுபதி தாக்கப்படவில்லை: பெங்களூரு காவல்துறை

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை என்று பெங்களூரு காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details