தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2021, 1:14 PM IST

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

1. பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கு அரசு வேலை; வேதனையை போக்கிய ஸ்டாலின்

பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்- 1 பிரிவில் தமிழ்நாடு அரசு காகித தாள் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிநியமன ஆணையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

2. வீடியோ: ஒரு கிலோ ஸ்வீட்ஸ் 25000 ரூபாயாம்! அப்படி என்ன இருக்கு அதுல?

விலை உயர்ந்த நெளஜா உலர் பழங்கள், மாம்ரா பாதாம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்வீட்ஸ்-இல் தங்க படலம் போர்த்தப்பட்டுள்ளது.

3. டெங்கு பாதிப்பு: தமிழ்நாடு உள்பட 9 மாநிலங்களுக்கு விரைந்தது மத்திய குழு

டெங்கு பரவல் அதிகமுள்ள ஒன்பது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு பாதிப்பை கட்டுப்படுத்த உயர்மட்டக் குழுக்களை ஒன்றிய அரசு அனுப்பிவைத்துள்ளது.

4. சுற்றுப்பயணம் நிறைவு: நாடு திரும்பிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ரோம், வாட்டிகன், ஸ்காட்லாந்து ஆகிய இடங்களுக்கு ஐந்து நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி இன்று (நவ. 3) டெல்லி திரும்பினார்.

5. தி.நகர் ஜெயசந்திரன் பர்னிச்சர்ஸ் கடையில் தீ விபத்து

சென்னை தி.நகர் ராமேஷ்வரன் தெருவில் அமைந்துள்ள ஜெயசந்திரன் பர்னிச்சர்ஸ் கடையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது.

6. கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை அரசே வழங்கும் - அமைச்சர் முத்துச்சாமி

கரும்பு விவசாயிகளிக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

7. வசீம் அக்ரம் கொலை வழக்கு - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது!

வாணியம்பாடி வசீம் அக்ரம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மேலும் ஒருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

8. குதிரையில் எடுத்துச்செல்லப்பட்ட ரேஷன் பொருட்கள் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

திணடுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லி.மலையூர் பகுதிக்கு குதிரையில் ரேஷன் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

9. தொடர் திருட்டில் ஈடுபட்ட முன்னாள் காவலர்; போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

கருமத்தம்பட்டி பகுதியில் வீட்டின் கதவை உடைத்து திருட்டில் ஈடுபட்ட முன்னாள் காவலரை பொதுமக்களே சுற்றிவளைத்து பிடித்து காவல்துறையிடம் ஓப்படைத்தனர்.

10. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 12 பேருக்கு "தியான்சந்த் கேல் ரத்னா விருது"

நாட்டின் உயரிய விருதான "தியான்சந்த் கேல் ரத்னா விருது" ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்ற 12 பேருக்கு வழங்கப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details