தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

By

Published : Oct 31, 2021, 1:04 PM IST

1. ரஜினிகாந்த் உடல்நிலை: நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

2. 'உலக நாடுகளுக்கு உதவ அடுத்த ஆண்டுக்குள் 500 கோடி தடுப்பூசிகள்' - பிரதமர் மோடி

உலக நாடுகளுக்கு உதவுவதற்காக அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடி கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்தியா தயாராக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

3. அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம்!

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

4. 'படையப்பா எழுந்து வா, பாட்ஷாபோல் நடந்து வா' - வைரமுத்து உருக்கம்!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் வேண்டி கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

5. தேவர் ஜெயந்தியை புறக்கணித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்... மற்றொரு பிளவை நோக்கி நகர்கிறதா அதிமுக?

தேவர் ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் பங்கேற்காமல் தவிர்த்துள்ளனர். ஆனால் சசிகலா கலந்து கொண்டுள்ளார். இதன் காரணமாக அதிமுக மற்றொரு பிளவுக்குத் தயாராகிறதா என்ற கேள்வி ஏழுந்துள்ளது.

6. தடுப்பூசிக்கு ’அண்ணாத்த’ டிக்கெட்: ஊராட்சிமன்றத் தலைவரின் கலக்கல் யுக்தி!

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு ;அண்ணாத்த’ படத்தின் இலவச டிக்கெட் வழங்கப்ப்டும் என வேலூர் பிரம்மபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் அறிவித்துள்ளார்.

7. இந்தியாவின் இரும்பு மனிதரின் 147ஆவது பிறந்தநாள்

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147ஆவது பிறந்த நாளான இன்று, அவரது திருவுருவப் படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

8. மெட்ரோ ஏரிகளில் அதிக நீர் இருப்பு: குறைந்த ஆன்லைன் பதிவுகள்

சென்னையில் உள்ள மெட்ரோ ஏரிகளில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதால், சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் அதிக அளவில் குழாய்களின் மூலம் நுகர்வோருக்கு விநியோகம் செய்கிறது. இதனால் ஆன்லைனில் பதிவு செய்து குடிநீர் பெறும் நுகர்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

9. ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்ற புனித்

மாரடைப்பால் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது தாய், தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திலேயே புனித்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

10. கரைபுரளும் அழகு வெள்ளத்தில் மின்னும் பொன் சிலை ரித்திகா சிங்!

பிரமிக்க வைக்கும் பிரம்மாண்டம்

ABOUT THE AUTHOR

...view details