தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 27, 2021, 1:24 PM IST

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

1. பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு - முன்னாள் சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி

பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

2. காங்கிரஸிற்கு டா டா... தனிக்கட்சி... கேப்டன் அமரீந்தர் அதிரடி!

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு (2022) தேர்தல் நடைபெறுகிறது.

3. பெகாசஸ் விவகாரத்தில் 3 நபர் விசாரணை குழு அமைப்பு!

பெகாசஸ் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் 3 நபர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

4. தமிழ்நாடு அரசின் புதிய ஆலோசகர் ஆகிறாரா அசோக்வர்தன் ஷெட்டி?

தமிழ்நாடு அரசின் புதிய ஆலோசகராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் அசோக்வர்தன் ஷெட்டி விரைவில் நியமிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

5. ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்விக் கொள்கையைப் பரப்புவதே ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்‘ - கி.வீரமணி குற்றச்சாட்டு

இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்.எஸ்.எஸ்.,சின் கல்விக் கொள்கையைப் பரப்புவதாகவே இருக்கிறது எனவும், தமிழ்நாடு அரசு இதில் எச்சரிக்கையாக இருந்து, எந்த வகையிலும் இதனை அனுமதிக்கவே கூடாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

6. ஜார்க்கண்ட் மாவோயிஸ்ட் சென்னையில் கைது

சென்னையில் பதுங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டை எண்ணூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

7. கரடியிடமிருந்து விவசாயியை காப்பாற்றிய நாய்

தோட்டத்துக்குள் புகுந்து விவசாயியை தாக்கிய கரடியை வளர்ப்பு நாய் ஒன்று குரைத்து விரட்டியுள்ளது.

8. தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்!

விஜய் மக்கள் இயக்கம் சார்பில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 129 பேர் விஜய்யை சந்தித்து வாழ்த்து பெற்று புகைப்படம் எடுத்துகொண்டனர்.
9. சசிகலா- ஒபிஎஸ் விவகாரம்; நழுவிய செங்கோட்டையன்

சசிகலா குறித்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூறிய கருத்து குறித்து தான் எந்தக் கருத்தையும் வெளியிடத் தயாராக இல்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

10. மலை உச்சியில் மாஸாக போஸ் கொடுத்த தல அஜித்

நடிகர் அஜித் மலை உச்சியில் எடுத்துள்ள புதிய புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details