தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்

By

Published : Sep 2, 2021, 1:21 PM IST

1. ஜல்லிக்கட்டில் இனி நாட்டு மாடுகள்: நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2. பொது சொத்துகளை விற்பது தேச நலனுக்கு எதிரானது - மு.க ஸ்டாலின்

பொதுத்துறை நிறுவன சொத்துகளை தனியார்மயமாக்குவதை கைவிடக்கோரி ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

3. தனியார்மயமாக்கலை திமுக அரசு ஏற்காது - தங்கம் தென்னரசு

பொது சொத்துகளை தனியார்மயமாக்குவது குறித்த சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை கொண்டு வந்த நிலையில், அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

4. ஓடிடியில் வெளியான படங்கள் தியேட்டருக்கு வருமா?

ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்குகளில் வெளியிட மாட்டோம் என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

5. சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எண்ணூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

6. பம்பர் டூ பம்பர் காப்பீடு வழக்கு ஒத்திவைப்பு

புதிய வாகனத்திற்கு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. ஓபிஎஸ் மனைவி மறைவு - டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

8. ஜி.பி. முத்து மீது புகார் - ஆபாச பேச்சால் சர்ச்சை

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடும் ஜி.பி. முத்து, சூர்யா தேவி உள்ளிட்டோரை கைது செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

9. வரதட்சணை கொடுமை- கேரளாவில் இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10. THE OVAL TEST: அஸ்வின் எனும் துருப்புச் சீட்டை பயன்படுத்துவாரா கோலி?

ஓவல் மைதானம் காலங்காலமாக சுழற்பந்துவீச்சுக்கு கைக்கொடுக்கும் என்பதால், உலகின் முதல்தர சுழற்பந்துவீச்சாளரான அஸ்வினை அணிக்கு அழைப்பதுதான், இடிந்து கிடக்கும் இந்திய அணிக்கு இருக்கும் ஒரே வழி. இன்றைய போட்டியில் அஸ்வின் களமிறக்கப்படும்பட்சத்தில் ரூட் vs அஸ்வின் என்ற போரை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details