தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 20, 2021, 1:07 PM IST

ETV Bharat / state

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-1-pm
top-10-news-at-1-pm

1.ஓபிசி சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

மாநில அரசுகள் ஓபிசி பட்டியலை தயாரிக்க அதிகாரம் அளிக்கும் 127ஆவது சட்டத்திருத்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (ஆகஸ்ட் 20) ஒப்புதல் அளித்துள்ளார்.

2.தரமற்ற புளியந்தோப்பு குடியிருப்பு விவகாரம் - 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்!

கட்டடத்தைக் கட்டிய குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் இரண்டு பேரை பணியிடை நீக்கம் செய்து குடிசை மாற்று வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

3.ராஜிவ் காந்தி பிறந்தநாள் - நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை

ராஜிவ் காந்தியின் 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று(ஆகஸ்ட். 20) மரியாதை செலுத்தினார்.

4.மோப்ப நாய்களின் 10 ஆண்டு பயணம் நிறைவு... பிரிய மனமின்றி தவித்த அலுவலர்கள்!

சென்னை விமான நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜி,பாதல் ஆகிய இரண்டு மோப்ப நாய்களும் ஓய்வு பெற்றன.

5.ஆப்கனில் பறக்கும் விமானத்திலிருந்து மூவர் விழுந்த நிகழ்வு: உயிரிழந்த தேசிய கால்பந்து வீரர்!

ஆப்கனில், அமெரிக்க விமானத்திலிருந்து விழுந்து உயிரிழந்தவர்களில், அந்நாட்டின் கால்பந்து வீரரும் ஒருவர் என்பது தெரிய வந்துள்ளது.

6.தூத்துக்குடி இரட்டை ரயில் பாதை: பயணிகள் ரயிலை இயக்க அனுமதி!

தட்டப்பாறை மீளவிட்டான் இடையேயான இரட்டை ரயில் பாதையில் பயணிகள் ரயிலை இயக்க, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.

7.அதிமுக ஆட்சியில் பல்வேறு குளறுபடி - பொன்குமார் குற்றச்சாட்டு!

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு குளறுபடிகளால் நலவாரிய உறுப்பினர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் இருந்து வந்தாக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

8.இந்தியாவில் மேலும் 36,571 பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஆக.19) ஒரேநாளில் கரோனா தொற்றால் 540 பேர் உயிரிழந்துள்ளனர்.

9.சுடுகாட்டில் இளைஞர் வெட்டி கொலை - ஐந்து பேர் கைது!

இளைஞர் ஒருவரை கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்த விவகாரத்தில் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

10.வந்துட்டான், வந்துட்டான், வந்துட்டான்...’ - 'கேஜிஎஃப் 2' அப்டேட் வெளியிட்ட இயக்குநர்!

'கேஜிஎஃப் 2' திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் வெளியிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details