தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 28, 2021, 1:19 PM IST

ETV Bharat / state

ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news@ 1 PM

ஈடிவி பாரத்தின் ஒரு மணி செய்திச்சுருக்கம்.

ஒரு மணி செய்திச் சுருக்கம்
ஒரு மணி செய்திச் சுருக்கம்

1 மக்களை திசை திருப்ப திமுக முயற்சி - எடப்பாடி பழனிசாமி

மக்களை திசை திருப்புவதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது திமுக பொய் வழக்கு போடப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

2 தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை - அண்ணாமலை

திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

3 ஓபிஎஸ்- இபிஎஸ் டெல்லி பயண ட்விட்டர் பதிவு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (ஜூலை. 26) டெல்லி சென்றது குறித்து தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

4 பிரதமர் மோடி, அமித் ஷா பதவி விலக வேண்டும் - திருமுருகன் காந்தி!

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

5 தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

6 கர்நாடக முதலமைச்சராக பசவராஜ் பதவியேற்பு!

கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை இன்று (ஜூலை 28) பதவியேற்றுக்கொண்டார்.

7 கரோனா - ஒரே நாளில் 640 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் நேற்று (ஜூலை 27) ஒரே நாளில் 640 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர்.

8 அடுத்தாண்டு தேர்தல்., உ.பி. மீது பாஜக கவனம்!

அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்தரப் பிரதேசம் மீது பாஜக முழு கவனத்தையும் செலுத்திவருகிறது.

9 உத்தரப் பிரதேசத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழப்பு

உத்தரப் பிரதேசத்தில் நடந்த கோர விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர்.

10 Exclusive: மிதக்கும் கற்களால் உருவாக்கப்பட்ட ராமப்பா கோயில்; 800 ஆண்டுகளாக அழியாத அழகியல்

தெலங்கானாவின் ராமப்பா கோயில் அதனை உருவாக்கிய கைவினை கலைஞரின் பெயரினால் அழைக்கப்படுகிறது. இக்கோயில் மிதக்கும் கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. இத்தகைய கற்கள் இன்று வரை எங்கும் பயன்படுத்தப்படவில்லை. 800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் பல அற்புதமான அம்சங்கள் உள்ளன. கோயிலின் சிறப்பம்சங்களைப் பற்றி இக்கட்டுரையில் அறிந்துகொள்வோம்

ABOUT THE AUTHOR

...view details