தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்.

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்
நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jul 23, 2021, 1:39 PM IST

1 நீலகிரியில் கனமழை - தேசிய பேரிடர் மீட்பு குழு வரவழைப்பு

நீலகிரியில் கனமழை பெய்து வருவதால் தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 2 குழுக்கள் வரவழைக்கபட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

2 சாய்பாபா கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆலோசனை!

சத்யசாய் நகரிலுள்ள சாய்பாபா கோயிலில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.

3 மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு நினைவு சின்னம்- செல்வப்பெருந்தகை உறுதி!

கூலி உயர்வு கேட்டு போராடி உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு நினைவுச் சின்னம், மணிமண்டபம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், அரசு அமைக்கவில்லை என்றால் திருநெல்வேலி காங்கிரஸ் சார்பாக அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு காங்கிரஸின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

4 திமுகவில் இணைந்த அதிமுக மகளிரணி செயலாளர்

அதிமுக திருச்சி மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான தமிழரசி சுப்பையா இன்று (ஜூலை 23) திமுகவில் இணைந்தார்.

5 பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் கத்தியைக் காட்டி மிரட்டல்

அதிமுக கொடி கட்டிய காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் கத்தியைக் காட்டி ஊழியர்களை மிரட்டி தப்பிச் சென்றுள்ளனர்.

6 லேப்டாப் திருட்டு- சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

சென்னையில் திறந்து கிடந்த செல்போன் கடைக்குள் புகுந்து லேப்டாப்பை திருடிச் சென்றவரை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

7 போதையில் கார் ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ மீது வழக்குப்பதிவு

சென்னையில் ஓலா கார் ஓட்டுநரை குடிபோதையில் தாக்கிய உதவி ஆய்வாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

8 கார்கில் வெற்றி தினம்- ராணுவ வீரர்கள் பைக் பயணம்!

கார்கில் வெற்றி தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் இந்திய ராணுவத் தளபதி (வடக்கு) உதம்பூர்- கார்கில் வரை 527 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

9 இந்தியாவுக்கு எதிராக பெகாசஸை பயன்படுத்திய மோடி, அமித்ஷா- ராகுல் குற்றச்சாட்டு

இந்தியாவுக்கு எதிராக பெகாசஸ் உளவு மென்பொருளை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

10 ஊடக நிறுவனங்களில் ஐடி ரெய்டு- பல்வேறு தரப்பினர் கண்டனம்

டைனிக் பாஸ்கர், பாரத் சமாச்சார் ஆகிய ஊடகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று நடத்திய சோதனையானது, ஊடகங்களை அச்சுறுத்தும் செயல் எனக் கூறி பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details