தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 News @ 1 Pm - செய்தித் தொகுப்பு

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்

By

Published : Jun 13, 2021, 1:36 PM IST

1. தேநீர் கடைகளை திறக்க அனுமதி!

தமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

2. சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு; வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சிவசங்கர் பாபா மீது கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போது அவ்வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

3. நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு!

தமிழ்நாட்டில் நாளை (ஜூன் 14) முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

4. மூன்று வீடுகளில் தொடர் திருட்டு: முன்னாள் காவலர் கைது!

விருதுநகர்: சாத்தூரில் அடுத்தடுத்துள்ள மூன்று வீடுகளில் நகை, பணம் ஆகியவற்றை திருடிய காவலரை சாத்தூர் நகர் காவல் துறையினர் கைது செய்தனர்.

5. பணி நிரந்தரம் செய்வதாக கூறி பணம் வசூலித்த விவகாரம் - சிபிசிஐடியில் புகார்

2018ஆம் ஆண்டில் நடமாடும் மருத்துவமனை ஊழியர்களிடம் பணம் பெற்றது குறித்து விசாரணை செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அதிரடியாக சிபிசிஐடியில் புகார் அளித்துள்ளார்.

6. ஒடிசா: மூன்றாம் பாலினத்தவருக்கு காவல்துறை பணிக்கான அழைப்பு

புவனேசுவர்: ஒடிசா மாநிலத்தில் காவல்துறை பணியில் சேர மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் மூன்றாம் பாலினத்தவர் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

7. ’ஜீன்’களை ஆட்டம் காண வைக்கும் ஜீ.வி.பிரகாஷுக்கு பிறந்தநாள்

தனது 34ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு, #HBDGVPRAKASH என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்கள் சமூக வலைதலங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

8. கேப்டன் அமெரிக்காவுக்குப் பிறந்தநாள்; குவியும் வாழ்த்துகள்!

கேப்டன் அமெரிக்கா பட ஹீரோவான கிறிஸ் ஈவான்ஸ் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் .

9. சிஎஸ்கே வீரர் மருத்துவமனையில் அனுமதி - கவலையில் ரசிகர்கள்

பி.எஸ்.எல் தொடரில் காயமடைந்த தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளெசிஸ், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

10. களத்தில் மயக்கமடைந்த டென்மார்க் வீரர்; அதிர்ச்சியில் உறைந்த கால்பந்து உலகம்

யூரோ 2020 கால்பந்து தொடரின் டென்மார்க் - பின்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் ஆட்டத்தின் பாதிலேயே மயங்கி விழுந்த சம்பவம், கால்பந்து ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details