தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 1 pm - Top 10 News @ 1 pm

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்தி சுருக்கம்

Top 10 News @ 1 pm
Top 10 News @ 1 pm

By

Published : Jun 8, 2021, 12:58 PM IST

1.'100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' - குஷியில் பயிற்சி மாணவர்கள்!

அனைத்து சாதியினரும் 100 நாட்களில் அர்ச்சகராகும் சட்டத்தை செயல்படுத்துவோம் என்ற அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம் என தமிழ்நாடு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

2.ஒரு லட்சத்திற்குக் கீழ் குறைந்த தினசரி கரோனா தொற்று

சுமார் 63 நாள்களுக்கு பின்னர், இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது.

3.தீபாவளி வரை ரேஷன் பொருட்கள் இலவசம்!

தீபாவளி வரை நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

4.உடற்கல்வி ஆசிரியர் மீது மேலும் இரு பாலியல் புகார்

மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை மீது மேலும் இரு மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர்.

5.”மருத்துவர்,செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை” - மா.சுப்பிரமணியன்

கரோனா நோயாளிகள் இறக்கும்போது மருத்துவமனை, மருத்துவர், செவிலியர்களை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6.ஆந்திராவிற்கு 5 டன் அரிசி கடத்த முயற்சி - லாரி பறிமுதல்!

வாணியம்பாடியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரிசி கடத்த முயன்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

7.பேரல் பேரலாக போலி எரிபொருள் பறிமுதல்... வேலூரில் துணிகரம்!

கட்டடத்தை வாடகைக்கு எடுத்து சிலர் சட்டவிரோதமாக பெட்ரோல், டீசல் தயாரித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

8.பெட்ரோலைத் தொடர்ந்து 100 ரூபாயை நெருங்கிய டீசல்!

நாட்டில் ஐந்து மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 100-ஐ தாண்டியுள்ள நிலையில், ராஜஸ்தானில் டீசல் விலையும் ரூபாய் 100-ஐ எட்டியுள்ளது.


9. ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி... துரிதமாக காப்பாற்றிய போலீஸ்..

ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தற்போது அதன் சிசிடிவி காட்கள் வெளியாகியுள்ளது.

10.ஹிட் சீரியலில் ரீ எண்ட்ரியான நடிகர் அசீம்

சின்னத்திரை நடிகர் அசீம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் ஒன்றில் கதாநாயகனாக களமிறங்கி இருக்கிறார்.

ABOUT THE AUTHOR

...view details